மூலிகைகள்

மருதாணி மருத்துவ பயன்கள்

மருதாணி துவர்ப்பு சுவை கொண்டது. வெண்மை, இளமஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணங்களை கொண்டது. சிறிய மரமாக வளரக்கூடியது. இதன் விதைகள் பட்டாணி போன்று காணப்படும். அழகுக்காகவும், மருத்துவ பயன்பாட்டிற்க்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகிறது.

மருதோன்றி, ஐவனம், அழவனம், ஐனாஇலை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் இலை, விதை, பூ, வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது.

இலைகள் அழகுக்காக கை, கால்களில் வண்ணங்களாக தீட்டப்படுகிறது. இது சேற்றுப்புண், பித்த வெடிப்பு போன்றவற்றிக்கு பூசினால் குணமாகும்.

வேர் உடலை தேற்றும், இதன் பூக்களை தலையணை போல் செய்து தலைக்கு வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். தலையில் பேன் தொல்லை இருந்தால் தீரும்.

நரைமுடி மறைய

மருதாணி இலைகளை மை போல் அரைத்து வடை போல் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றில் அதில் உலர்த்திய மருதாணியை போட்டு 3 வாரங்களுக்கு வெளியில் வைத்து பிறகு வடிகட்டி வைக்கவும்.

இந்த எண்ணையை வழக்கம்போல் தலைக்கு தேய்த்து வந்தால் நரைமுடி மாறும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

வெள்ளைப்படுதல் குணமாக

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாக மருதாணி இலையை அரைத்து சாறு பிழிந்து 5 தேக்கரண்டி அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வர வெள்ளைபடுத்தல் குணமாகும். இதுபோன்று 10 நாட்கள் குடித்து வர வேண்டும்.

கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு

மருதாணி இலையை பசைபோல் அரைத்து கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பூசி வர உடனே குணமாகும்.

வாய்ப்புண், தொண்டைப்புண்

மருதாணி இலையை கொழுந்தாக பறித்து இலேசாக இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு சூடேற்றி கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி ஆறியதும் வாய் கொப்பளிக்க தொண்டைப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

தலைவலி குணமாக

இலைகளை அரைத்து தலையில் பற்று போட தலைவலி குணமாகும். இலைகளை அரைத்து பாதங்களுக்கு போட உடல் குளிர்ச்சி பெறும். நகத்தில் வரும் புண்களுக்கு இலையை அரைத்து கட்டினால் குணமாகும்.

கை, கால் வலி

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து இடித்து பூசினால் கை, கால் வலி குணமாகும். தலைக்கு பற்று போட தலைவலி குணமாகும். மருதாணி இலைச்சாறு 30மிலி அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து உணவுக்கு பின் குடித்து வர கை, கால் வலி குணமாகும்.

கருமை நிறம் மாற

நாம் ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் கருமை நிறத்தை போக்க மருதாணி இலையுடன் அருகம்புல், மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வர கருமை நிறம் மாறும்.

கருந்தேமல் மறைய

இலையுடன், வேம்பு கொழுந்து, குப்பைமேனி, மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வர கருந்தேமல் மறையும்.

கூந்தல் செழிப்பாக வளர

நல்லெண்ணையில் மருதாணி இலைகளை போட்டு காய்ச்சி ஒரு நாட்களுக்கு ஊறவைத்து பிறகு வடிகட்டி கூந்தலுக்கு தேய்த்து வர தலைமுடி செழிப்பாக வளரும்.

இது கண்களுக்கு குளிர்ச்சியை தரும். உள்ளங்கால்களில் தடவி மஜாஜ் போன்று செய்தால் நல்ல தூக்கம் வரும்.

கூந்தல் தைலம்

அதிகமாக கூந்தல் தைலங்களில் சேர்க்கப்படும் மூலிகையாகும். நரைமுடியை மாற்றும் தன்மை உடையது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் அதனாலேயே கை , கால்களில் வண்ணங்கள் பூசி பயன்படுத்தி வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =

error: Content is protected !!