சுண்டைக்காய் பயன்கள்
சுண்டைக்காய் வெண்ணிற பூக்களையும், கொத்துக்கொத்தாக காய்களையும் கொண்ட செடி இனம். காய் சிறியதாக இருந்தாலும் பல மருத்துவ குணங்களை கொண்டதாகும். நம் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய இரும்புச்சத்து, புரதம், கால்சியம் போன்ற சத்துக்களை உள்ளடக்கியதாகும்.
நோய் எதிர்ப்பு திறன்
வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கிறது இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றலை நம் உடலுக்கு தருகிறது. இரத்தத்தில் கொழுப்பு ரத்த குழாய்களில் சேரவிடாமல் தடுக்கிறது. இதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இரத்த சோகை நீங்க
சுண்டைக்காயில் இரும்புச்சத்து உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தசோகையை போக்கும். மேலும் இரத்த வெள்ளை அணுக்களை உருவாக்குகிறது.
கண் பார்வை திறன்
கண் பார்வை திறனை அதிகரிக்கிறது. ஞாபக சக்தியை தருகிறது, நரம்பு மண்டலத்துக்கு அதிக சக்தியை தருகிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண் இவற்றை குணமாக்கும்.
பிரசவமான பெண்களுக்கு
பிரசவமான பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியற்றும். பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் அங்காயப்பொடியில் சுண்டைக்காயும் சேர்க்கப்படுகிறது.
பசியின்மை, மார்பு சளி குணமாக
சுண்டைக்காய் வற்றல், நெல்லிக்காய் வற்றல், வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, சுக்கு, மாங்காயில் உள்ள பருப்பு, சீரகம் இவற்றை அனைத்தையும் வறுத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை 2 தேக்கரண்டி அளவு மோரில் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை, மார்பு சளி, பேதி, மூலம் ஆகியவை குணமடையும்.
ஆஸ்துமாம் காச நோய் தீர
சுண்டைக்காயை புளித்த மோரில் உப்பு கலந்து ஊறவைத்து காயவைத்து எண்ணையில் வறுத்து சாப்பிட்டு வர மார்புச்சளி, காசநோய், ஆஸ்துமா ஆகியவை தீரும்.
மேலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இதை எண்ணெயில் பொரித்து சாப்பிட வயிற்றுப்போக்கு நின்று விடும்.
சுண்டக்காய் வற்றல்
நல்ல முற்றிய சுண்டைக்காயை லேசாக இடித்து மோரில் போட்டு ஊறவைத்து பிறகு காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு நெய்யில் அல்லது எண்ணையில் வறுத்து சாப்பிடலாம் அல்லது குழம்பாக செய்து சாப்பிடலாம்.
இதனால் வயிற்றில் உள்ள பூச்சி தொல்லை தீரும், மேலும் உடல் சோர்வு, மயக்கம், வயிற்று பொருமல் ஆகியவை குணமாகும்.
சுண்டைக்காய் சூப்
சுண்டைக்காயை இரு துண்டுகளாக நறுக்கி சின்னவெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட இருமல், மூலச்சூடு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். தலைசுற்றல், மயக்கம், வாந்தி ஆகியவை நீங்கும்.