மூலிகைகள்

ஆண்மையை அதிகரிக்கும் அதிமதுரம்

அதிமதுரம் வேர், தண்டு, கிழங்கு மருத்துவ பயனுடையது. சிறிது இனிப்பு சுவையுடன் அதிக பலனை தரக்கூடிய அற்புத மூலிகையாகும். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறந்த பலனை தரக்கூடிய மூலிகை.உணவு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு செரிமானத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலையும் தீர்க்கிறது.

ஆண்மை அதிகரிக்க, உடல் பலம் பெற

அதிமதுரம் சூரணத்தை 2 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலம் அதிகரிக்கும், பெண்களுக்கு கருப்பை பிரச்சினைகள் குணமாகும்.

இருமல் குணமாக

அதிமதுரம், மிளகும், கடுக்காய் மூன்றையும் சம அளவாக எடுத்து வறுத்து இடித்து சளித்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட சூட்டினால் ஏற்படும் இருமல் குணமாகும்.

நரம்புத்தளர்ச்சி குணமாக

அதிமதுர பொடியை 2 கிராம் தினமும் தேனில் குழைத்து காலை வேளையில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் இரைப்பை, தொண்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். தொண்டை கரகரப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

இரத்தப்போக்கு குணமாக

அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து 25 கிராம் பொடியை 1/4 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 100மிலியாக வந்ததும் இறக்கி வடிகட்டி தினமும் காலை வேளையில் குடித்துவர ரத்தப்போக்கு குணமாகும்.

மலச்சிக்கல் தீர

அதிமதுரம், ரோஜா இதழ் (உலர்ந்தது), சோம்பு மூன்றையும் இடித்து பொடியாக்கி சலித்து வைத்து கொண்டு இரவு தூங்குவதற்கு முன் பாலில் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

உடல் சுறுசுறுப்பாக இயங்க

அதிமதுர சூரணம், சோம்பு சூரணம் இரண்டையும் 5 கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் உள்ளுறுப்புகள் சூடு தணியும், உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.

மூட்டுவலி நீங்க

அதிமதுரத்தூளை இரவில் தண்ணீரில் கலந்து ஊறவைத்து காலையில் பருகி வர மூட்டு வலிகள் நீங்கும்.

சிறுநீரக பிரச்சனைகள் தீர

அதிமதுர தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஆறவைத்து பருகி வர சீறுநீரக தொற்றுநோய்களால் ஏற்படும் சீறுநீர்ப்பைகளில் உள்ள புண்களை ஆற்றும். சீறுநீரகங்களில் உண்டாகும் கற்களை வரவிடாமல் தடுக்கும்.

இளநரை நீங்க

அதிமதுர வேரை கூந்தல் தைலங்களில் சேர்த்து பயன்படுத்த கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. மேலும் இளநரையைகட்டுப்படுத்துகிறது .

சுளுக்கு குணமாக

சுளுக்கு ஏற்பட்டால் அதன் மீது விளக்கெண்ணையை தடவி அதன் மேல் அதிமதுர இலைலைய வைக்க தசை இளகி சுளுக்கு குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

error: Content is protected !!