மூலிகைகள்
குப்பைமேனி மருத்துவ பயன்கள்
குப்பைமேனி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ பயனுடையது.
குப்பைமேனி மருத்துவ பயன்கள்
- உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணையுடன் செய்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து வந்தால் உடல் வலி தீரும்.
- குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடா தலைவலி குணமாகும்.
- குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம்பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
- மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும்.
- குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து பாலில் கலந்து கொடுக்க குழைந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும்.
- குப்பைமேனி இலையுடன் சர்க்கரை சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.
- மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
- குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர பருக்கள், புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
எளிமையாக அதே நேரத்தில் அருமையான விளக்கங்கள்…தொடரட்டும் உங்கள் பணி….