உணவே மருந்து
புளிச்சை கீரை கடையல் செய்முறை
புளிச்சை கீரை கடையல் செய்முறை
தேவையான பொருள்கள்
- புளிச்சை கீரை – 1 கட்டு
- வெங்காயம் – 1
- காய்ந்த மிளகாய் -5
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கடுகு
செய்முறை
புளிச்சை கீரையை நன்றாக சுத்தம் செய்து இட்லி வைப்பது போல் ஆவியில் வேகவைத்து தனியாக கடைந்து வைக்க வேண்டும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிறகு கடைந்து வைத்துள்ள புளிச்சக்கீரை கடைசலை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்க வேண்டும்.
பயன்கள்
- இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால், குழந்தைகளுக்கு முக்கியமான உணவாகும்.
- ஆண்மை மற்றும் பெண்மை பெருகும்.
- மலச்சிக்கலுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது.
- இரத்தம் மற்றும் சத்து குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர குணமாகும்.
- மூட்டு வலி உள்ளவர்களுக்கு புளிச்சக்கீரை சிறந்த உணவு.