பழங்கள்மூலிகைகள்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சை

எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. சமையலுக்கும், ஊறுகாய், மிட்டாய் போன்றவை தயாரிக்கவும் லெமன் ஜூஸ், லெமன் டீ போன்ற போன்ற பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

நறுமண பொருட்கள் தயாரிக்கவும், சோப்பு, டூத் பேஸ்ட் மற்றும் கிளீனிங் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. கோவில்களில் பூஜை செய்யவும், வாகனங்களில் திருஷ்டிக்காகவும், சிலர் மாந்திரீகத்துக்காகவும் பயன்படுகின்றன.

உடல் எடை குறைய

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அன்றாட உடற்பயிற்சியுடன் தினமும் எலுமிச்சைபழத்தை பிழிந்து மிதமான சுடு நீரில் கலந்து குடித்து வர தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடை குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வரலாம் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

தலைவலி குறைய

எலுமிச்சை சாற்றில் சிறிது மிளகு சேர்த்து அரைத்து தலையில் பற்றுப்போட தலைவலி குறையும். மேலும் எலுமிச்சை டீ சாப்பிட்டால் தலைவலி குறையும். வெங்காயச்சாற்றுடன் எலுமிச்சைசாற்றை கலந்து சாப்பிட்டால் பித்தம் குறைந்து தலை சுற்றல் நிற்கும்.

இருமல் குணமாக

எலுமிச்சை சாறு, தேன் இரண்டும் சம அளவு கலந்து சாப்பிட இருமல் குணமாகும். எலுமிச்சைசாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட வாந்தி வருவது நிற்கும்.

பித்த வெடிப்புக்கு

எலுமிச்சைச்சாறுடன் மாமர பிசின் கலந்து காலில் உள்ள பாத வெடிப்புகளுக்கு பூசி வர குணமாகும்.

பற்கள் பளிச்சிட

எலுமிச்சை தோலை காயவைத்து அரைத்து பொடியாக்கி அதில் பல் துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென்று மாறும்.

சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது

எலுமிச்சையில் சிட்ரேட் உள்ளதால் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சிட்ரேட் குறைந்த அளவு இருந்தால் சிறுநீரக கற்கள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. எனவே எலுமிச்சைச்சாறு நாம் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்பு குறைகிறது.

புற்றுநோயை தடுக்கிறது

எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதால் கணைய மற்றும் வயிற்று புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

காலையில் எலுமிச்சைச்சாறு குடிப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சினையும் தீரும். எலுமிச்சையில் உள்ள எதிர் நச்சுத்தன்மை பண்புகள் செரிமானத்தை சீராக்குகிறது.

பல் பிரச்சனைகளை குணமாக்குகிறது

சிட்ரிக் அமிலம் நிறைந்து காணப்படுவதால் அது தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிகிறது. பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை, மாலை எலுமிச்சைசாறுடன் சிறிது உப்பு சேர்த்து வாய்கொப்பளித்து வந்தால் இக்குறைபாடுகள் நீங்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை போக்கும்.

சுவாச பாதையை சீரமைக்கிறது

எலுமிச்சைச்சாறு அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு சளி, சுவாச கோளாறுகளை குணமாக்குகிறது. எலுமிச்சைச்சாற்றை அருந்துவதால் உடலில் ஆண்டிபாடிக்களை அதிகரித்து நோய் தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளைஅழித்துவிடுகிறது .

தோல் சுருக்கங்களை தடுக்கிறது

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்க உதவுகிறது. எலுமிச்சம்பழச்சாறு குடிப்பவர்களுக்கு தோலில் ஈரப்பத்தன்மை பாதுகாக்கப்பட்டு இளமையான தோற்றத்தை தருகிறது

கூந்தல் ஆரோக்கியத்திற்கு

முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சைச்சாறு தலைக்கு தேய்ப்பதால் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றை நீக்கி முடிக்கு பளபளப்பை தருகிறது.

எலுமிச்சை தீமைகள்

  • ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை சாப்பிடலாம் அதற்கு அதிகமானால் வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
  • அதிகமாக எலுமிச்சை உட்கொண்டால் பல் எனாமலை சிதைத்துவிடும்.
  • எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் பல் கூச்சத்தை உண்டாக்கும்.
  • தலைக்கு தேய்த்து குளிக்கும் பொது 5 நிமிடங்களுக்குள் குளித்துவிட்டு வேண்டும். அதிக நேரம் ஊறவைத்தால் அதில் உள்ள அமிலத்தால் முடி வேர்க்கால்களை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

error: Content is protected !!