அவுரி பயன்கள்
அவுரி தமிழகமெங்கும் வளரக்கூடிய மூலிகையாகும். இச்செடி முழுவதும் மருத்துவப்பயனுடையது. வீக்கம், கட்டிகளை குறைக்கவும். விஷத்தினை முறிக்கவும் முதன்மையாக மூலிகையாகும்.
சாயங்கள் தயாரிக்க இச்செடி பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்தில் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட மூலிகைகளை பயன்படுத்துவார்கள். அதில் ஒன்று அவுரி மூலிகையாகும்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முடிகளுக்கு நிறத்தை கொடுக்கும் தைலங்களில் சேர்க்கப்படுகிறது.
மஞ்சள் காமாலை குணமாக
அவுரி இலையை நன்றாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 1/4 லிட்டர் வெள்ளாட்டுப்பாலில் கலந்து வடிகட்டி காலை வெறும்வயிற்றில் மூன்று நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமாகும்.
வெள்ளைப்படுதல்
அதிகமாக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் இதனை அவுரி மூலிகை கொண்டு உடனே சரிசெய்யலாம். யானை நெருஞ்சில், அவுரி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து மோரில் கலந்து பத்து நாட்களுக்கு காலைவேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
அவுரி இலை பொடி (அவுரி கற்பம்)
அவுரி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, செருப்படை, கோட்டைக்கரந்தை ஆகிய இலைகளை சம அளவு எடுத்து நன்றாக காயவைத்து அரைத்து பொடி செய்துவைத்துக்கொண்டு காலை, மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு வீதம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு கர்ப்பபை தொடர்பான பிரச்சினைகள், முறையற்ற மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிடவும்.
அவுரி இலை ஹேர் டை
மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் காயவைத்து தனித்தனியாக அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இரவு மருதாணி பொடியை தண்ணீரில் கலந்து வைத்து காலையில் தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து அலசிவிட்டு தலைமுடியை உலரவிட வேண்டும்.பிறகு அவுரி இலை பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பூசி ஒரு மணி நேரம் மீண்டும் ஊறவைத்து அலசவேண்டும். இப்படி மாதம் ஒரு முறை செய்தால் போதும் நரை முடி கருப்பாக மாறும்.
அவுரி மாத்திரை
அவுரி இலை, பெருங்காயம், மிளகு சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு சாப்பிட கீல்வாதம், வாயு ஆகியவை குணமாகும்.