அழகு

பித்த வெடிப்பு குணமாக

பெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க எடுத்துக்கொள்ளும் அக்கறையும் நேரமும் தங்கள் பாதங்களை கவனிக்க செலவிடுவதில்லை. அது நாளடைவில் பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.அதன் பிறகு என்ன மருந்து போட்டாலும் மாறுவதில்லை என்று சொல்பவர்கள் தான் ஏராளம்.இயற்கை முறையில் பித்த வெடிப்பை எப்படி சரி செய்வதென்று பார்ப்போம்.

பித்த வெடிப்புக்கான தீர்வுகள்

  • தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர பித்த வெடிப்பு முற்றிலும் காணாமல் போகும்.
  • வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் அரைத்து சிறிது சுண்ணாம்பு சேர்த்து அதனுடன் சிறிது விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வர பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.
  • பப்பாளி பழத்தை விதைகளை நீக்கி நன்கு அரைத்து பாதங்களில் தேய்த்து பிறகு தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும் இப்படி செய்து வந்தால் பித்தவெடிப்பு மறையும்.
  • மருதாணி இலைகளை அரைத்து சிறிது மஞ்சள் பொடி சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வர பித்த வெடிப்பு மறையும்.

பித்த வெடிப்பு வராமல் தடுக்க

  • தூங்குவதற்கு முன் பாதங்களை நன்றாக கழுவி துடைத்து விட்டு தேங்காய் எண்ணையை தேய்த்து வர பித்த வெடிப்பு வராமலே தடுக்கலாம்.
  • தினமும் குளித்தவுடன் பாதங்களை நன்றாக துடைத்து பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வர பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =