மூலிகைகள்
கத்தரிக்காய் பயன்கள்
கத்தரிக்காய் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய காய் ஆகும். ஊதா, பச்சை கலர்களில் பெரும்பான்மையாக கிடைக்கிறது. தற்பொழுது வெள்ளை மற்றும் மேலும் சில நிறங்களிலும் ஹைப்ரிட் கத்தரிக்காய் கிடைக்கிறது.
பெரும்பாலும் பிஞ்சு கத்திரிக்காய் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். நல்ல சுவை உடையது. சாம்பார், காரக்குழம்பு, கூட்டு என பலவகைகளில் கத்திரிக்காய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கத்தரிக்காயில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. 100 கிராம் கத்தரிக்காயில் நம் உடலுக்கு 24 கலோரிகளை தருகிறது.
கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள்
- கத்திரிக்காய் சாப்பிடுவதால் வயது முதிர்வதை தடுக்கிறது. என்றும் இளமையான தோற்றத்தை தருகிறது.
- அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
- நாக்கில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது.
- அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிடுபவர்களுக்கு குரல் வளம் நன்றாக இருக்கும்.
- ஈரல், வாதநோய் உள்ளவர்கள் கத்திரிக்காய் எதாவது ஒருவகையில் சமைத்து ஒரு வாரத்திற்கு சாப்பிட்டால் இந்நோயின் தாக்கம் குறைந்து விரைவில் குணமடையும்.
- உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் வராது.
- பசியின்மையை போக்கும், உடலுக்கு வலிமையை தரும். ஊளைச்சதையை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
- கத்தரிக்காய் கொழுப்பை கரைப்பதுடன் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவுக்கு கொண்டு வருகிறது. இதனால் இதய நோய்கள் , மாரடைப்பு போன்றவை வராமல் பாதுகாக்கிறது.
- இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ் என்ற பொருள் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. இதனால் நல்ல ஞாபக சக்தியை தருகிறது.
- வைட்டமின்களும் கனிமச்சத்தும் நிறைந்துள்ளதால் சருமத்தை ஒளிர வைக்கிறது மேலும் தோலில் ஏற்படும் சுருக்கத்தை தள்ளிபோடுகிறது இதனால் என்றும் இளமையான தோற்றத்தை பெறலாம்.
கத்தரிக்காய் தீமைகள்
அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்கவும்