கற்பூரவள்ளி பயன்கள்
கற்பூரவள்ளி செடி இனத்தை சேர்ந்தது, வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ஒரு சிறந்த மூலிகை எனலாம்.
குழந்தைகளுக்கு மார்பு சளி, இருமலுக்கு சிறந்த மூலிகையாகும். இதனால் தென்னிந்தியாவில் அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் மூலிகையாகும்.
100 கிராம் கற்பூரவள்ளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கொழுப்பு | 4.3 கிராம் |
சோடியம் | 25 மிகி |
பொட்டாசியம் | 1,260 மிகி |
வைட்டமின் ஏ | 34% |
கால்சியம் | 159% |
வைட்டமின் சி | 3% |
இரும்புச்சத்து | 204% |
வைட்டமின் பி6 | 50% |
மக்னீசியம் | 67% |
குழந்தைகளுக்கு மார்பு சளி நீங்க
குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி நீங்க கற்பூரவள்ளி இலை, துளசி இரண்டையும் சமஅளவு எடுத்து சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் லேசாக வதக்கி சாறு பிழிந்து 5மிலி அளவு காலை வேலையில் கொடுத்து வர மார்பு சளி குணமாகும்.
இருமல், சளி குணமாக
கற்பூரவள்ளி இலைச்சாறுடன் சிறிது தேன் கலந்து காலை நேரத்தில் சாப்பிட இருமல், சளி, தொண்டைக்கட்டு, தொண்டைக்கம்மல், மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும். கற்பூரவள்ளி இலைச்சாறுடன் கற்கண்டு கலந்து கொடுக்க இருமல் தீரும்.
குழந்தைகளுக்கு சளி பிடிக்கால் இருக்க
கற்பூரவள்ளி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறியது அந்நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க
தினமும் கற்பூரவள்ளி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதனால் உடலை நோய்கள் தாக்கும் அபாயம் குறையும்.
கொலஸ்ட்ரால்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
நுரையீரல் பாதிப்பு குறைய
கற்பூரவள்ளி, வல்லாரை, தூதுவளை இவற்றை சமஅளவு எடுத்து நன்றாக காயவைத்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியை 200மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 4-ல் ஒரு பங்காக அதாவது 50 மிலி வரும் வரை காய்ச்சி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழாய் பிரச்சனைகள் தீரும்.
அஜீரண கோளாறுகள் நீங்க
அஜீரண கோளாறு ஏற்பட்டால் கற்பூரவள்ளி சாறு எடுத்து லேசான சுடுதண்ணீரில் கலந்து குடிக்க அஜீரண கோளாறுகள் நீங்கும்.
உயர் இரத்த அழுத்தம்
பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால் கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை கட்டுக்குள் வைக்கும்.
ஜலதோஷம்
கற்பூரவள்ளி சாறுயுடன், நல்லெண்ணெய், சிறிது சர்க்கரை சேர்த்து தலைக்கு தடவினால் ஜலதோஷம் குணமாகும்.
காச இருமல், வாத கடுப்பு குணமாக
இலைச்சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாக சுண்டக்காய்ச்சி 1/2 ஸ்பூன் பெரியவர்களுக்கும், 1/4 ஸ்பூன் சிறியவர்களுக்கு கொடுத்து வர காச இருமல், நெஞ்சு சளி, வாத கடுப்பு குணமாகும்.
கற்பூரவள்ளி ரசம்
வறட்டு இருமலுக்கு கற்பூரவள்ளி ரசம் சிறந்ததாகும். வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும்.
ஆப்பிளை விட 42 மடங்கு அதிகமாக ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ , சி போன்ற சத்துக்கள் நிறைதுள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.