மணப்பெண்கள் அழகை பராமரிக்க
மணப்பெண்கள் திருமணத்திற்கு முன்பு குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே தங்கள் அழகை முறையான பராமரிப்பை மேற்கொள்ளவேண்டும்.
திருமணத்திற்கு முன்பு நிறைய நிகழ்ச்சிகள் மணப்பெண்ணை மிகவும் சோர்வடைய செய்யும், அப்படி சரியாக பராமரிப்பு இல்லையென்றால் புத்துணர்வு இன்றி காணப்படுவார்கள்.
மணப்பெண்கள் தங்களுடைய மனநிலையையும் அமைதியான முறையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். திருமண நேரத்தில் மணப்பெண்கள் அழகான தோற்றத்துடன் காண சில குறிப்புகளை இங்கே காணலாம்.
தலைமுடி பராமரிப்பை உடனே தொடங்குங்கள்
மணப்பெண்ணாக போகும் பெண்கள் திருமண நாட்களுக்கு முன்பாகவே கூந்தல் அழகாக காட்சி அளிக்க தயாராக வேண்டும். முன்பே தயாரானால் கடைசி நேர பதட்டத்தை குறைக்கலாம்.
தலைமுடியை சீரான முறையில் கழுவ வேண்டும்
மணப்பெண்கள் கூந்தலை ஷாம்பூ போட்டு தலைமுடியை வாரம் இரண்டு முறை கழுவ வேண்டும் இப்படி செய்வதால் தலைமுடிக்கு உண்டாகும் சேதத்தில் இருந்து பாதுகாப்பு தரும். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து தலைமுடியை மசாஜ் செய்து வரலாம்.
இயற்கையான முறையில் கூந்தல் பராமரிப்பு
மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியை கலரிங் செய்ய பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி பளபளப்பான தோற்றம் அளிக்கும்
முகம் பளபளப்பாக
- எலுமிச்சை சாறுடன் சிறிது பால் சேர்த்து சில துளிகள் கிளிசரின் சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்து பிறகு முகத்தில் தடவி காலையில் கழுவி வர முகம் பளபளப்பாகும்
- தக்காளிச்சாறு எடுத்து முகத்தில் பூசி 30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பளிச்சென்று மாறும்.
- வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் நன்றாக தடவி 30 நிமிடங்கள் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பளபளக்கும்.
முகச்சுருக்கம் நீங்க
பாதாம் பருப்பை அரைத்து அதில் பால் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகச்சுருக்கம் நீங்கும்.
கடலை மாவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறும்.