வெள்ளரிக்காய் பயன்கள்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்து உள்ளது. சிறுநீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை தரக்கூடியது. கோடைகாலங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் உடலை பாதுகாக்கிறது. சரும பிரச்சினைகளுக்கும் வெள்ளரி பெரிதும் உதவுகிறது. வெள்ளரி பிஞ்சு, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ பயனை தரக்கூடியது.
வெள்ளரியில் உள்ள சத்துக்கள்
சோடியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. பொட்டாசியம் அதிக உள்ளதால் உடலில் இரத்த சிவப்புஅணுக்களை உற்பத்தி செய்கிறது.
சிறுநீர் பிரச்சினைகள் தீர
நீர் சுறுக்கு, நீர் கடுப்பு , சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் அரிப்பு, வலி ஆகியவற்றை குணமாக்குகிறது. உடல் சூட்டை தணிக்கும். வாதம், பித்தம், கபம் சார்ந்த மூன்று நோய்களையும் போக்கக்கூடியது.
கல்லடைப்பு, நீரடைப்பு தீர
10 கிராம் வெள்ளரி விதையை மேல் தோலை நீக்கிவிட்டு அதன் பருப்பை பால் விட்டு அரைத்து அதை பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, கல்லடைப்பு, நீர் துவார வெடிப்பு, நீரடைப்பு ஆகியவை குணமாகும்.
மலச்சிக்கல்
வெள்ளரி இரைப்பையில் உள்ள புண்களை குணமாக்குகிறது. தினமும் 2 வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சினை தீர்ந்து. குடல் சுத்தமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
வெள்ளரி கணைய செயல்பாடுகளுக்கு தேவையான ஹார்மோன் உள்ளதால் இன்சுலினை சுரக்க செய்கிறது இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.
பல் பாதுகாப்பு
பல் ஈறுகளை பாதுகாக்கும் திறன் உள்ளதால் பற்களை உறுதியாக்குகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தை போக்கக்கூடியது.
பசி உண்டாக
வெள்ளரிப்பழத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல பசியை உண்டாக்கும். அதீத தாகத்தை அடக்கும்.
கண்கள் பாதுகாப்பு
உடலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது கண்களில் உள்ள ஈரப்பதம் வறண்டு போய் விடும். பிஞ்சு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஈரப்பதம் வறண்டு போய் விடாமல் கண்களை பாதுகாக்குகிறது.
வெள்ளரியை சிறு சிறு துண்டுகளை நறுக்கி கண்களில் வேல் வைத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர கண்கள் குளிர்ச்சி அடையும்.
உடல் எடையை குறைக்க
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு
வெள்ளரியில் உள்ள கந்தகமும், சிலிக்கனும் முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது. வெள்ளரிச்சாற்றுடன் பசலை கீரை சாறு, கேரட் சாறு ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி பெறும். தலைமுடி உதிர்தல் பிரச்சினை தீரும்.
வெள்ளரி விதை
சரும வறட்சியை நீக்கி உடலை பளபளப்பாக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நீரடைப்பு, நீர் துவார வெடிப்பு, சதையடைப்பு போன்றவற்றை குணமாக்கக் கூடியது.
வெள்ளரிக்காய் கூட்டு
வெள்ளரிக்காயுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும். வெள்ளரிக்காய் கூட்டு செய்முறை