கேரட் மருத்துவ நன்மைகள்

கேரட் பச்சையாகவே சாப்பிடலாம் இனிப்பு சுவையை கொண்டது. இதில் எண்ணற்ற சத்துக்கள் கொண்டது வைட்டமின்கள், ஆன்டி ஆச்சிடன்ட், தாதுக்கள், பைபர், பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது.
இதை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதால் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு தருகிறது. இதை அன்றாட உணவில் சேர்ப்பதால் கொழுப்பு பிரச்சினை என்பதே எனலாம். மேலும் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவுக்கும் நல்லது.
கண் பார்வை திறன் மேம்படும்
கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் கண் பார்வை திறனை அதிகரிக்கும். வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் மாலை நேர கண் குறைபாட்டுக்கு வழிவகுக்கும். இதனால் கேரட் உண்பதால் வைட்டமின் ஏ தேவையான அளவு கிடைக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு
பச்சை கேரட்டில் பெக்டின் நார்ச்சத்து உள்ளதால் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுவதாக ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பல் ஆரோக்கியத்திற்கு
கேரட்டை நன்றாக மென்று சாப்பிடுவதால் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியதிக்கும் உதவுகிறது. வாய் தூய்மை அடைகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து உடலில் குறையும் பொழுது செரிமான மண்டலம் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் கடினமானதாக இருக்கும். கேரட்டில் செரிமானத்திற்கு தேவையான அமிலங்களை சுரக்க வைக்கிறது.
என்றும் இளமைக்கு (carrot benefits for skin)
கேரட்டில் கொலாஜன் என்ற சருமத்தை பராமரிக்கும் புரதம் நிறைந்துள்ளதால் சரும சுருக்கங்களை.தடுக்கிறது. வயதாவதை தள்ளி போடுகிறது. மேலும் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால் தோல் நிறமி, சுருக்கங்களை தடுக்கிறது.
இரத்த சோகை நீங்க
அவித்த முட்டையுடன் கேரட், தேன் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும், இரத்த சோகை நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்தம் சுத்தமாகும்.
குடல் புண் வராமல் தடுக்க
கேரட் சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து சாப்பிட குடல் புண்கள் வராமல் தடுக்கும். மேலும் பித்த கோளாறுகள் நீங்கும்,
கேரட் தீமைகள்
கேரட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது தோலில் அழற்சி ஏற்படும். இதனால் தோல் தடித்து போகலாம், முகப்பரு போன்றவையும் ஏற்படலாம்.