ஜாதிக்காய் நன்மைகள்
ஜாதிக்காய் ( nutmeg ) நறுமண இலைகளையும், மஞ்சள் நிற பூக்களையும் கொண்ட மர இனமாகும். இதன் கனியை ஊறுகாய் செய்து பயன்படுத்துகின்றனர். இதன் தோல் பகுதிதான் ஜாதிபத்திரி. இதன் விதை ஜாதிக்காய்.
ஜாதிக்காயை உலகமெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மேற்கு தொடர்ச்சிமலையுலும், மலேசியாவில் பினாங்கிலும் உற்பத்தியாகிறது. மிகுந்த மணமுடையது, வாசனை திரவியங்களிலும் சேர்க்கப்படுகிறது. அதிக மருத்துவ குணமுடையது.
ஜாதி பத்ரி
ஜாதிக்காய் ஓட்டின் மெல்லிய தோல் தான் ஜாதி பத்ரி. இது மசாலாப்பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இதை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட செரிமான சக்தியை கொடுக்கும்.
ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரிக்க
ஜாதிக்காயை பொடியாக்கி 20 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து ஒரு நாளைக்கு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர விந்தணு அதிகாரிக்கரிக்கும். ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரித்து தாம்பத்திய உறவை நீண்ட நேரம் அதிகரிக்கும்.
இரைப்பை, ஈரலை வலுவாக்கும்
20 கிராம் ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து சாப்பிட வர இரைப்பை, ஈரலை வலுவாக்கும். மேலும் பக்கவாதம், வாந்தி, நடுக்கம் இவற்றை குணமாக்கும்.
முக அழகுக்கு ஜாதிக்காய்
ஜாதிக்காயுடன் சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் மறையும், கரும்புள்ளி, தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
தேமல் மறைய
தேமலுக்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊறவைத்து உரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி வர குணமாகும்.
வாயு நீங்க, செரிமான சக்தி அதிகரிக்க
ஜாதிக்காயை பொடியாக்கி அதில் சீரகப்பொடி, சுக்குப்பொடி சேர்த்து உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட வாயுவை நீக்கி செரிமானத்தை அதிகரிக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. மனதுக்கு அமைதியை தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்க ஜாதிக்காயை பயன்படுத்தலாம்.
இரத்த புற்றுநோயை தடுக்கிறது
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கிறது. மேலும் இரத்தத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதாக தாய்லாந்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மை
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு உணவுக்கு பின் சூடான பாலில் 5 கிராம் அளவு ஜாதிக்காய் பொடியை சேர்த்து குடிக்க நல்ல தூக்கம் வரும். மேலும் இரைப்பை, அஜீரண கோளாறு நீங்கும்.