மூலிகைகள்

நெல் வகைகள் பயன்கள்

நெல் இந்தியாவில் உணவாக அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.ஆசியாவில் கி.மு 4500 க்கு முன்பே நெல் சாகுபடி பல நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளன.  உலகில் ஆபிரிக்க நெல், ஆசிய நெல் என இருவகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அவளை நன்றாக வேக வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட உடலுக்கு வலிமையை தரும்.நெல்பொறி கஞ்சியாக சமைத்து சாப்பிட வயிற்று வலி தீரும். மேலும் வாந்தி, பேதி, நீர்ச்சுருக்கு, வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும்.

புழுங்கல் அரிசி

அறுவடைக்கு பின் காயவைத்து அவித்து பிறகு அரைத்து எடுப்பது புழுங்கல் அரிசி என்று அழைக்கப்படுகிறது.

பச்சை அரிசி

நெல்லை வேகவைக்காமல் காயவைத்து அரைப்பது பச்சை அரிசியாகும், பச்சை அரிசியை சத்தமாக வடித்து சாப்பிடுவதில்லை பொங்கல் செய்யவும். அரைத்து பலகாரங்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

தமிழக பாரம்பரிய நெல் வகைகள்

  • சிவப்புக் குடவாழை
  • பனங்காட்டுக் குடவாழை
  • வெள்ளையான்
  • ஒசுவக்குத்தாலை
  • குருவிகார்
  • கல்லுருண்டை
  • சிவப்புக் கவுனி
  • வரப்புக் குடைஞ்சான்
  • நவரா காட்டுயானம்
  • சிறுமணி
  • கரிமுண்டு
  • ஒட்டடையான்
  • முடுவு முழுங்கி
  • குள்ள்க்கார்
  • நவரை
  • குழிவெடிச்சான்
  • கார்
  • அன்னமழகி
  • கருங்குறுவை
  • சூரக்குறுவை
  • அறுபதாம் குறுவை
  • கல்லுண்டை
  • வாடன் சம்பா
  • கருடன் சம்பா
  • இலுப்பைப்பூ சம்பா
  • மாப்பிள்ளைச் சம்பா
  • சீரக சம்பா
  • வாசனை சீரக சம்பா
  • கைவரை சம்பா
  • தேங்காய்ப்பூ சம்பா
  • கிச்சடி சம்பா
  • களர் சம்பா
  • குழியடிச்சம்பா
  • பூங்கார்
  • காட்டு யானம்
  • நெய் கிச்சி
  • விஷ்ணுபோகம்
  • பூங்கார்
  • கருத்தகார்
  • சீதாபோகம்
  • மணக்கத்தை

நெல் மருத்துவ பயன்கள்

நெல் வகைகள் மருத்துவ பயன்கள்
கருப்பு கவுணி புற்றுநோயை தடுக்கிறது, இன்சுலின் சுரக்க வைக்கிறது.
மாப்பிள்ளை சம்பா நரம்பு மண்டலத்தை வலுவாக்கும், அண்மைய அதிகரிக்கும்.
பூங்கார் பெண்களுக்கு சிறந்தது, சுகப்பிரசவதிற்கு உதவுகிறது, தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்
காட்டுயானம் நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய்க்கு சிறந்தது
கருத்தக்கார் மூலம், மலச்சிக்கல் குணமாகும்
காலாநம மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் போன்றவற்றுக்கு சிறந்தது
மூங்கில் அரிசி மூட்டுவலி, முழங்கால் வலி குணமாகும்
அறுபதாம் குறுவை எலும்புகள் பலமடையும்
இலுப்பைப்பூ சம்பா பக்கவாதம் குணமாகும்
தங்கச்சம்பா பல், இதயம் பலமடையும்
கருங்குறுவை உடல் இழந்த சக்தியை மீட்கும்.
கருடன் சம்பா இரத்தத்தை சுத்தப்படுத்தும்
கார் தோல் நோய்களை குணமாக்கும்
குடை வாழை குடலை சுத்தப்படுத்தும்
கிச்சிலி சம்பா சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளது
நீலம் சம்பா இரத்த சோகையை குணமாக்கும்
சீரகச் சம்பா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், அழகான தோற்றத்தை தரும்
தூய மல்லி உள் உறுப்புகளை வலுவாக்கும்
குழியடிச்சான் தாய்ப்பால் சுரக்கும்
பிசினி மாதவிடாய் கோளாறுகள் நீங்கும், இடுப்பு வலி குணமாகும்.
சூரக்குறுவை உடல் எடை குறையும், உடலை வலுவாக்கும்.
வாலான் சம்பா விந்தணு உற்பத்தி அதிகரிக்கும், அழகு கூடும்.
வாடன் சம்பா மன அழுத்தம் குறையும், நல்ல தூக்கம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

error: Content is protected !!