மூலிகைகள்
மிளகாய் பயன்கள்
மிளகாய் காரமான உணவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. மிளகாயை பச்சையாகவும், காயவைத்தும், பொடியாகவும், வற்றலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பசி தூண்டியாகவும், வயிற்றில் உள்ள வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.
இந்தியாவில் பலவகை மிளகாய் பயிரிடப்படுகிறது. சன்னம் மிளகாய், LC 334 மிளகாய், அதிசய கார மிளகாய், குண்டூர் மிளகாய், காந்தரி மிளகாய், படகி மிளகாய், காஷ்மீரி மிளகாய், ஜுவலா மிளகாய், பையடாகி மிளகாய் என பலவகை மிளகாய் உள்ளது.
மிளகாய் வடிவங்களில் குடமிளகாய், குண்டு மிளகாய், ஊசி மிளகாய் என வடிவங்களை கொண்டது.
மிளகாய் பயன்கள்
- பச்சைமிளகாயில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது.
- நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
- செரிமானத்தை அதிகரிக்கிறது.
- பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
- பச்சை மிளகாய் உடல் எடையை குறைக்கும்.
- ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளதால் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்குகிறது.
- பச்சைமிளகாய் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மிளகாய் தீமைகள்
மிளகாயை அதிகமாக சாப்பிட்டால் கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், குடல் புண், இரைப்பை கோளாறு, வயிற்றுப்போக்கு, வாய் மற்றும் தொண்டை புண் போன்றவை ஏற்படும்.