புங்கை மருத்துவ குணங்கள்
புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும், வெண்மை நிறப்பூக்களையும், நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது. இதன் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இதனை பூந்தி சுரஞ்சகம் என்றும் அழைப்பதுண்டு.
தீ காயங்கள் குணமாக
புங்கை மரப்பட்டை, ஆலமரப்பட்டை, அத்தி இலை (பழுத்தது) இவற்றை நன்கு இடித்து புங்கன் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டி தீ காயங்களுக்கு தடவி வர விரைவில் புண்கள் ஆறும்.
மூல நோய்க்கு
இதன் பட்டையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்து காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு தினமும் குடித்து வர மூல குணமாகும்.
புண்கள் ஆற
புங்கை வேரை பொடியாக்கி தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் ஆறும். இதன் இலையை விளக்கெண்ணையில் வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
எலி கடி விஷம் முறிய
புங்கம் வேர், மகிழம்வேர், சீந்தில் இலை, மிளகு, திப்பிலி இவற்றை சமஅளவு எடுத்து கற்றாழை சாற்றை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட எலி கடித்ததினால் ஏற்படும் விஷம் முறியும்.
வாயுக்கோளாறு, செரியாமை நீங்க
புங்கு இலையை இடித்து சாறு பிழிந்து எடுத்து 30 மிலி அளவு குடித்து வர வாயுக்கோளாறு, செரியாமை நீங்கும். வயிற்று புண் குணமாகும். பேதி, ரத்த மூலத்தை குணப்படுத்தும்.
சரும நோய்களுக்கு
புங்கை எண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் சரும நோய்கள் வருவதை தடுக்கலாம். சருமத்திற்கு பளபளப்பை தரும்.
சோரியாசிஸ் நோய் குணமாக
பரங்கி பட்டை சூரணத்தை புங்க எண்ணையில் காய்ச்சி தைலம் போன்று வந்ததும் இறக்கி வைத்துக்கொண்டு பூசி வந்தால் சோரியாசிஸ் குணமாகும்.
மூட்டுவலி, மூட்டு வீக்கம் குறைய
புங்க எண்ணையுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து மூட்டு வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும்.
புங்கை மரம் வீட்டில் வளர்க்கலாமா
வீட்டில் ஒரு மரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது அடர்ந்த பசுமையான இலைகளை கொண்டதால் நல்ல நிழலை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்குகிறது.
மூங்கில் மரத்திற்கு அடுத்தபடியாக ஆக்சிசனை அதிகளவு உற்பத்தி செய்வதில் புங்கை மரம் உள்ளது. வீட்டிற்கு அருகில் இருந்தால் நச்சு கிருமிகளின் பாதிப்பை தடுக்கிறது.