கடுகு மருத்துவ பயன்கள்
கடுகு சிறுத்தாலும் ‘காரம்’ குறையாது என்று தமிழில் பழமொழி உண்டு. அது 100% பொருந்தும் ஏனென்றால் இதில் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது.
கருப்பு, பழுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வகைகளில் உள்ளது. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இதன் சுவையை ஆராய்ந்து தங்களுடைய உணவுகளில் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இந்திய சமையல்களில் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
கடுகு பயன்பாடுகள்
- பெரும்பாலும் அனைத்து குழம்பு வகைகள், பொரியல், கூட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சட்னி, ஊறுகாய்களிலும் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
- சாலட் மற்றும் சில உணவு பொருட்களில் அழகுக்காக மேல் புறமாக பயன்படுத்தப்படுகிறது.
- கடுகை எண்ணையாக தயாரித்து பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெயில் ஊறுகாய் செய்தால் நீண்ட நாட்களாக கெடாமல் இருக்கும்.
- அன்றாட உணவுவில் தினமும் பயன்படுத்தலாம். கடுகு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்த உணவாக இருந்தாலும் தாளிப்பதற்கு தாராளமாக பயன்படுத்தலாம்.
மனக்குழப்பம், சோர்வு நீங்க
கடுகு 50 கிராம் அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து மூன்று லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி இளஞ்சுடான அளவுக்கு வந்ததும் அதில் இரு கால்களையும் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். இது போன்று செய்து வர மனக்குழப்பம், படபடப்பு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவை நீங்கும்.
இரத்தக்கட்டு, மூட்டுவலி குணமாக
கடுகை தண்ணீர் விட்டு அரைத்து இரத்தக்கட்டு, மூட்டுவலி உள்ள இடங்களுக்கு பற்று போட உடனே குணமாகும். இதை செய்யும் போது தோல் தடுப்பது போல் இருந்தால் உடனே எடுத்து விட்டு லேசான சுடு நீரில் கழுவி விட வேண்டும்.
இருமல், ஆஸ்துமா தீர
கடுகை பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட இருமல், ஆஸ்துமா, கபம் ஆகியவை குணமாகும். வெந்நீரில் கலந்து கொடுக்க விக்கல் தீரும்.
வெண்கடுகு நன்மைகள்
- வெண்கடுகு தூளுடன் அரிசி மாவு சேர்த்து தண்ணீரில் கலந்து அதை ஒரு துணியில் நனைத்து வயிற்றில் பற்று போட வயிற்று வலி குணமாகும்.
- இரைப்பு நோய், இருமல் இருந்தால் நெஞ்சில் பற்று போடா குணமாகும்.
கடுகு தீமைகள்
அதிக அளவு உட்கொண்டால் வாந்தி ஏற்படும். நீண்ட நேரம் உடலில் தேய்த்து வைத்திருந்தால் உடலில் அரிப்பு ஏற்படும்.