சிறுகீரை பயன்கள்
சிறுகீரை சிறிய இலைகளை கொண்ட கீரை இனம். மருந்துகளின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது எனவே பத்திய மருந்துகள் சாப்பிடும் பொழுது இதை தவிர்க்க வேண்டும். வீக்கம், பித்த நோய்களை குணப்படுத்தக்கூடியது.
சிறுகீரையில் உள்ள சத்துக்கள்
இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இரும்பு சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை உடலின் உறுதிக்கும் எலும்புகள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. இதயம் மற்றும் இரத்த நரம்புகள் சீராக இயங்க உதவுகிறது.
கண் பார்வை திறன் அதிகரிக்க
சிறுகீரையை அடிக்கடி சாப்பிட்டு வர கண் பார்வை திறனை அதிகரிக்கும். மேலும் கண் சம்பந்தமான கண் படலம், கண் புகைச்சல், கண் காசம் ஆகியவை குணமாகும்,
நீர்க்கோவை நீங்க
சிறுகீரையை பாசிப்பருப்புடன் சமைத்துண்ண உடலில் உள்ள நீர்க்கோவையை போக்கும்.
இரத்த சோகை
இக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர இரத்த சிவப்புஅணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். மேலும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
சிறுகீரை தைலம்
கண் வறட்சி மற்றும் கண் நோய்களுக்கு சிறு கீரை தைலம் தலைக்கு தேய்த்து குளித்து வர கண் நோய்களுக்கு சிறந்த தீர்வை தரும்.
உடல் வலிமைக்கு
சிறுகீரையுடன் துவரம் பருப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நெய்யில் வதக்கி கடைந்து சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமை பெறும்.
சிறுநீரகம் சிறப்பாக செயல்பட
சிறுநீரகம் மற்றும் சிறு நீர்ப்பை சிறப்பாக செய்யப்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு உதவுகிறது.
*இக்கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் செரிமானம் எளிதில் ஆகாது. இதனால் மலச்சிக்கலை உண்டாக்கும்.