புடலங்காய் மருத்துவ பயன்கள்
புடலங்காய் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. உடல் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மெலிந்த உடல் எடை அதிகரிக்கும். ஆண்மையை அதிகரிக்கும் தன்மை புடலங்காயில் உள்ளது.
புடலங்காயில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் ஏ, பி மற்றும் சி, இரும்புச் சத்து, கால்சியம், கார்போ ஹைட்ரேட், மினரல்கள், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, அயோடின் ஆகிய சத்துக்கள் உள்ளது.
ஆண்மைக்கு சிறந்தது
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆண்மையை அதிகரிக்கும், விந்தணுவை கெட்டிப்படுத்தும், நீண்ட நேர உடலுறவை தரும்.
வயிறுப்புண் குணமாக
புடலங்காயை சாப்பிட்டுவர குடல் புண், வயிற்றுப்புண், தொண்டை புண் குணமாகும். அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் குடல் புண், வயிற்றுப்புண் வருவதை தடுக்கலாம்.
மூலநோய்க்கு
புடலங்காய் செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. மூலநோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய உணவாக புடலங்காய் உள்ளது. இது இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைகிறது.
உப்பு நீர் வெளியேற
இதில் நீர்ச்சத்து உள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளிற்றுகிறது. மேலும் கண் பார்வையை அதிகரிக்கிறது.
உதடு வெடிப்பு
நாக்குகள் மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குகிறது. நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.