யானை நெருஞ்சில் மருத்துவ குணங்கள்
யானை நெருஞ்சில் மூலிகை சிறுநீர் கோளாறுகளை நீக்கும் சிறந்த மூலிகையாகும். இது குளிர்ச்சியை தரும் மூலிகையாகும். உடல் சூடு, அதீத தாகம், பித்தத்தால் ஏற்படும் மயக்கத்தை போக்குகிறது.
நீர்க்கடுப்பு குணமாக, உடல் சூடு குணமாக
இதன் சமூலத்தை ( இலை, காம்பு, காய் ) இவற்றை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு கலக்கினால் அது திரவம் போல் மாறும் அதனை வடித்து சர்க்கரை சேர்த்து சாப்பிட சிறுநீர் கடுப்பு உடனே குணமாகும். உடல் சூடு குறையும்.
கல் அடைப்பு நீங்க
யானை நெருஞ்சில் செடியை இடித்து தண்ணீரில் கலந்து பத்து நிமிடம் கலக்கிக்கொண்டிருந்தால் குழகுழப்பாக மாறும் அதனை வடிகட்டி 50 மிலி அளவு குடித்து வர கல் அடைப்பு நீங்கி சிறுநீர் கல் கரைந்து விடும்.
நீர்க்கட்டு, நீர் எரிச்சல், உடல் உஷ்ணம் குணமாக
யானை நெருஞ்சில் செடியை நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக்கொண்டது 1/2 ஸ்பூன் அளவு தயிரில் கலந்து தினமும் காலை நேரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வர நீர்க்கட்டு, நீர் எரிச்சல், உடல் உஷ்ணம் ஆகியவை குணமாகும்.
கட்டிகள் குணமாக
இதன் இலையை அரைத்து கட்டிகள் மீது பற்று போட உடைத்து குணமாகும்.
இயற்கை ஷாம்பு
இதன் இலையை பறித்து தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை ஷாம்பு போல் பயன்படுத்தலாம், கூந்தல் நல்ல மென்மையாக மாறும் . இயற்கை ஷாம்பூவாக பயன்படுத்திவரலாம்