பற்கள் பலம் பெற, உடல் வலிமை பெற மாசிக்காய்
மாசிக்காய் உடலுக்கு வலிமையை தருகிறது. பல் நோய்களுக்கு சிறந்த தீர்வை தருகிறது. சித்த மருத்துவ பல் பொடிகளில் சேர்க்கப்படுகிறது. இதன் மரத்தில் இருந்து கசிந்து திரண்டு காய் போன்று வரும் இதுவே மாசிக்காய் ஆகும்.
மாசிக்காய் மாறாத உள்ளுறுப்பு சூடு, குழந்தைகளுக்கு உண்டாகும் கணை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு கணை சூடு, பேதி போன்றவற்றிற்கு தாய்ப்பாலுடன் மாசிக்காயை உரைத்து லேசாக குழந்தைகளின் நாவில் வைத்தால் உடனே குணமாகும்.
உடல் வலிமை பெற
மாசிக்காயை லேசாக வறுத்து பொடியாக்கி ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் நல்ல பலம் பெறும். மேலும் மலச்சிக்கல் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு
மாசிக்காய்ப்பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து நெய் சேர்த்து சாப்பிட மாதவிடாய் நேரங்களில் அதிக இரத்தப்போக்கு குணமாகும்.
குடல் புண் குணமாக
மாசிக்காய்ப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவில் மசித்து கொடுக்க நீண்ட நாள் உள்ள குடல் புண் குணமாகும்.
பல் ஈறு பலம்பெற
மாசிக்காயை தூளாக்கி வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வர பல் நோய்கள் குணமாகும். ஈறுகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும் இதனால் பற்கள் உறுதி பெறும் .
வேர்வை நாற்றம் விலக
மாசிக்காயை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வர நாற்றத்தை அகற்றி நல்ல நறுமணத்தை தரும். மேலும் தேமல், சிரங்கு போன்றவை இருந்தால் அவற்றை நீக்கு குணமாக்கும்.
மாசிக்காய் தைலம்
மாசிக்காய்ப்பொடி , கஸ்தூரி மஞ்சள் பொடி இரண்டிலும் 10 கிராம் அளவு எடுத்து 1/4 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை பல் வலி, பல் அசைவுகளுக்கு ஈறுகளில் வைத்து தேய்க்க குணமாகும்.
மாசிக்காய் பல் பொடி
இயற்கை பற்பொடிகளில் மாசிக்காயை சேர்த்து செய்து தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகள் பலம் பெறும், சம்பந்தமான நோய்கள் தீரும். பல் நோய்கள் வருவதை தடுக்கலாம்.