மூலிகைகள்

கொத்தமல்லி மருத்துவ பயன்கள்

கொத்தமல்லி உணவில் சுவைக்காகவும், மணத்திற்க்காகவும், உணவை அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சூப்பிலும் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

கொத்தமல்லி சக்திவாய்ந்த கீரையாகவும், இயற்கை சுத்திகரிப்புக்கான காரணிகள் அதிகளவு காணப்படுகிறது. இது ஒரு ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

உடல் உஷ்ணத்தை குறைக்கும்

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். உடல் எரிச்சலை தணிக்கவும். காய்ச்சலை குணமாக்கவும் கொத்தமல்லி பயன்படுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

செரிமான கோளாறுகளை நீக்குகிறது. குடல் பகுதிகளில் சேரும் நச்சுக்களை நீக்குகிறது. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களை உள்ளடக்கியதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது.

இரத்த சோகை

வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கியதால் இரத்தசோகையை நீக்குகிறது. இரத்த உறைதலை மேம்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் நன்றாக உறுதியுடன் வளரும்.

நல்ல தூக்கத்தை பெற

தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கொத்தமல்லியை இரவில் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல தூக்கம் வரும். கொத்தமல்லியை சட்டினியாக அல்லது துவையலாக சேர்த்துக்கொள்ளலாம்.

மாரடைப்பு வரும் ஆபத்தை குறைகிறது

ரத்த குழாய்களில் கொழுப்புகளை சேர விடாமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் ஆபத்தை குறைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =

error: Content is protected !!