
சாத்துக்குடி சிட்ரஸ் பழவகையை சார்ந்ததாகும். இனிப்பு எலுமிச்சை (sweet lemon) என்றும் அழைக்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் இது தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்று தென் கிழக்கு ஆசியா, எகிப்து, சிரியா மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் அதிகளவு உள்ளது.
சாத்துக்குடியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவு உள்ளதால் உடல் உள்ள நச்சுக்களை வெளியிற்றுகிறது. இதனால் தான் சாத்துக்குடி சாப்பிட்டவுடன் புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வயிற்றுக்கோளாறுகளை நீக்குகிறது
நார்ச்சத்து சாத்துகுடியில் நிறைந்து காணப்படுவதால் செரிமான கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகள் வலு பெறவும் உதவுகிறது.
ஈறுகளின் இரத்த கசிவு
சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவு உள்ளதால் வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவு நோய் குணமாகும். எனவே தினமும் சாத்துக்குடி சாறு அருந்திவர இந்நோய் குணமாகும்.
உடல் புத்துணர்ச்சி பெற
சாத்துக்குடி சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். இதனால் தான் நோயுற்றவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்படுகிறது. இது உடனடி பலனத்தைத்தரும். மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல இளமை தோற்றத்தை பெறலாம்.
இரத்த அணுக்கள் அதிகரிக்க
இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளதால் புதிய இரத்தம் விரைவாக விருத்தியாகும். இதனால் தான் இரத்த தானம் கொடுப்பவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது.
இது இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு கால்சியம் சத்து என்பது அவசியமாகும் ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது இதனால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி ஜூஸ் கொடுத்து வர நல்ல வளர்ச்சியை அடைவார்கள்.
என்றும் இளமைக்கு
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடிச்சாறு அருந்திவந்தால் முதுமை தோற்றத்தை உண்டாக்கும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது. இது கோலாஜென் உற்பத்தியை தூண்டிவிடுவதால் சருமத்தை இளைமையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் எடை குறைய
சாத்துக்குடிச்சாறுடன் சிறிது தேன் கலந்து குடித்து வர உடல் எடை சரியாக இருக்க உதவுகிறது. இது கொழுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடல் சீராக இயங்க உதவுகிறது.