கருணைக்கிழங்கு நன்மைகள்
கருணைக்கிழங்கு மூலநோயை குணப்படுத்த சித்தமருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்படுகிறது. உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க வாரம் ஒருமுறை சமைத்துண்ண நல்ல பலன் கிடைக்கும்.
இதில் காட்டுக்கருணை, காருங்கருணை, காறாக்கருணை என மூன்று வகைகள் உள்ளது.
கருணை கிழங்கில் உள்ள சத்துக்கள்
இதில் வைட்டமின் சி மற்றும் பி,நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கும் இதனால் மூல நோய்கள் வருவதை தடுக்கிறது.
மூல நோய் குணமாக
காட்டுக்கருணை கிழங்கை சித்த மருத்துவத்தில் லேகியமாக செய்து மூல நோய் உள்ளவர்களுக்கு கொடுப்பது வழக்கம். இது உடனடி பலனைத்தரும்.
வாத நோய்கள் தீர
காறாக்கருணைக்கிழங்கை சமைத்து சாப்பிட வாதநோய்கள், உடல் சூடு, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் என அனைத்தும் குணமாகும்.
செரிமான கோளாறுகளை நீக்கும்
அடிக்கடி கருணைக்கிழங்கை உணவில் செரித்துக்கொள்வதால் அஜீரண கோளாறுகளை நீக்கி ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.
கருணைக்கிழங்கு குழம்பு
கருணைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு. நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெந்தயம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிறகு மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன் சிறிது புளி கரைசல் ஊற்றி கொதிக்க வைத்து கருணைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.