மூலிகைகள்

சீரகம் பயன்கள்

சீரகம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருளாகும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒவ்வொன்றிலுமே மருத்துவ பயன்கள் உள்ளன.அசைவம் மற்றும் கார உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

சீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும். நச்சுகளை வெளியேற்றவும் பயன்படுகிறது.
வாந்தி, விக்கல், அசீரணம், கல்லடைப்பு, கண் எரிச்சல் என பல நோய்களுக்கு சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

செரிமான பிரச்சினைகள் தீர

சீரகத்தை வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு அரை ஸ்பூன் அளவு சீரகப்பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அதில் சிறிது மிளகுதூள் சேர்த்து குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.

செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது. தினமும் 2 முறை இதுபோன்று சாப்பிடலாம்.

சளி நீங்க

சீரகத்தில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகள் சளி மற்றும் இருமலை குணமாக்குகிறது. ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறுது இஞ்சி அதில் சேர்த்து வடிகட்டி குடித்து வர சளி மற்றும் இருமல் குணமாகும். தினமும் 2 முறை சாப்பிடலாம்.

வாயு மற்றும் பித்தம் குணமாக

சீரகப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட வாயு மற்றும் பித்தம் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி குணமாக

சீரகத்தை இளஞ்சுடாக வறுத்து பொடியாக்கி பனங்கருப்பட்டியை சேர்த்து சாப்பிட நரம்புகள் வலுவாகும், நரம்பு தளர்ச்சி குணமாகும். 21 நாட்களுக்கு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

தீராத விக்கல் குணமாக

சிலருக்கு விக்கல் எடுத்தால் தண்ணீர் குடித்தவுடன் நின்று விடும், சிலருக்கு நாள் முழுவதும் நீண்டு கொண்டே இருக்கும். இவர்கள் திப்பிலி 8, சீரகம் 10 இவற்றை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட விக்கல் நின்று விடும்.

வயிற்றுக்கோளாறு நீங்க

சீரகம், ஏலக்காய் இவற்றை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி 1/4 ஸ்பூன் அளவு உணவுக்கு பின் சாப்பிட வயிறு உப்புசம், வயிறு மந்தம் போன்ற வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.

மாதவிடாய் கோளாறு நீங்க

சீரகம் 2 ஸ்பூன் அளவு எடுத்து இரவில் தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சீரற்ற மாதவிடாய் சீராகும்.

குழந்தைகளுக்கு பசியை தூண்ட

சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள் அவர்களுக்கு சீரகம், திப்பிலி, ஏலக்காய் இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அப்பொடியின் சமஅளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 1/2 கிராம் முதல் 1 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர நல்ல பசியை தூண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 6 =

error: Content is protected !!