மூலிகைகள்

தாம்பத்தியத்தை பலப்படுத்தும் முருங்கைப்பூ

முருங்கைப்பூ மருத்துவ குணம் அதிகம் நிறைந்ததாகும். குறிப்பாக ஆண்மையை அதிகரிக்கும், தாம்பத்ய உறவை நீடிக்கும், நரம்புத்தளர்ச்சியை நீக்கும் என எண்ணற்ற மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.

பிரம்ம விருட்சம்

சித்தர்கள் ‘பிரம்ம விருட்சம்’ என்று கூறுகிறார்கள். முருங்கைப்பூவை பாலில் கலந்து சாப்பிடலாம் நல்ல பலன் கிடைக்கும். மேலும் சூப்பாகவும், துவையலாகவும், கஷாயமாகவும் அல்லது பருப்புடன் சேர்த்து கடையலாகவும் சமைத்து சாப்பிடலாம்.

உடலுறவில் இன்பத்தை அதிகரிக்க

பாலை நன்றாக காய்ச்சி அதில் முருங்கை பூவை அதில் போட்டு நாட்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து கலக்கி தினமும் மாலை வேளை சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். உடலுறவில் இன்பத்தை அதிகரிக்கும். இது போன்று 2 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

உடல் சூடு குறைய

ஒரு ஸ்பூன் முருங்கைப்பூ பொடியை தேனில் குழைத்து தினமும் ஒருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கைகட்டுப்படுத்தும்.

விந்தணு குறைபாடு நீங்க

முருங்கைப்பூவை வேகவைத்து அதனுடன் துவரம்பருப்பு, சிறிதளவு தேங்காய், பச்சைமிளகாய் போட்டு கடையல் போல் செய்து சாப்பிட்டு வர விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.

கண் எரிச்சல் குணமாகும்

முருங்கைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏற்படும் வெண்படலமும் குணமாகும். பார்வை கோளாறுகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி குணமாக

முருங்கைப்பூவை காயவைத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து தினமும் காலை வேளையில் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் உடல் வலிமையாகும். தாம்பத்ய உறவு நீடிக்கும்.

விந்து முந்துதல் பிரச்சனை

முருங்கை பூ பொடியை 100மிலி பாலில் கலந்து அதில் சிறிது பாதம் பருப்பு பொடியை சேர்த்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர விந்து முந்துதல் பிரச்னை தீரும். இது போன்று மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். இதுவே முருங்கைப்பூ பால் எனப்படும்.

முருங்கைப் பூவை கஷாயம்

இப்பூவை கஷாயம் வைத்து சாப்பிட்டு வர மன அமைதி பெறும், உடல் வலிமை பெறும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =

error: Content is protected !!