மூலிகைகள்

கேழ்வரகு பயன்கள்

கேழ்வரகு ஆண்டுக்கு ஒருமுறை விளையும் தானிய பயிராகும். 4000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய உணவாகும். இந்தியாவில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

வெப்பமண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. ராகி, கேப்பை, ஆரியம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற உணவாகும்.

கேழ்வரகு உடலுக்கு தேவையான சக்தியை தருவதால் நம் முன்னோர்கள் காலை உணவாக இதை சாப்பிட்டு வந்தனர். இது பசியை கட்டுப்படுத்தும்.

அரிசி மில்களில் தோல் நீக்கி பாலிஷ் செய்யப்படுகிறது இதனால் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் தானியங்களில் அப்படி செய்வது இல்லை இதனால் கேழ்வரகு போன்ற தானியங்களை உணவில் செய்துகொள்வதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.

எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை சரியான அளவில் இருக்க உதவுகிறது.

உடல் எடை குறைய

கேழ்வரகில் ட்ரிப்டோபான் அமிலம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை சாப்பிடலாம்.

இரத்தசோகையை தடுக்கும்

இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் இரத்த சோகையை வராமல் தடுக்கிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சிறந்த உணவாகும். மேலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது.

கொழுப்பு குறைய

உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச்செய்கிறது. மேலும் கேழ்வரகில் உள்ள லெசித்தின், மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

கேழ்வரகு எப்படி சாப்பிடலாம்

  • இதனை மாவாக அரைத்து பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து பானமாக குடிக்கலாம்.
  • நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்துடன் சேர்த்து ரொட்டியாக செய்து சாப்பிடலாம்.
  • கேழ்வரகு மாவுடன் நெய் சேர்த்து நன்றாக கிளறி சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமையை பெறும்.
  • கேழ்வரகை கூழ், கஞ்சி, களி, இட்லி, தோசை, புட்டு, ரொட்டி, பக்கோடா இது போன்று செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு தீமைகள்

இது உடலுக்கு உஷ்ணத்தை தரும் எனவே மூலநோய் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =

error: Content is protected !!