அழகு

முதுமை தோற்றத்தை தடுக்கும் கற்றாழை

கற்றாழை சரும அழகிற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் இயற்கையாகவே உதவி புரிகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கம் முதுமையான தோற்றத்தை தருகிறது. கற்றாழைக்கு தோல் சுருங்குவதை தள்ளி போடும் குணம் உள்ளது. இதனால் கற்றாழையை கொண்டு தோல்கள் மற்றும் முகத்தை பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • ஒரு தேக்கரண்டி ஓட்ஸ்
  • அரைக்கரண்டி ஆலிவ் ஆயில்

செய்முறை

கற்றாழை ஜெல், ஓட்ஸ், ஆலிவ் ஆயில் மூன்றையும் ஒன்றாக பிசைந்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர சருமம் பொலிவு பெறும்.

இந்த கற்றாழை ஜெல் இறந்த செல்களை நீக்குவதோடு புதிய செல்களை உருவாக்குகி சருமத்திற்கு பொலிவை தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

error: Content is protected !!