மூலிகைகள்

அவரைக்காய் பயன்கள்

அவரைக்காய் கொடி இனத்தை சார்ந்ததாகும். தென் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. பூக்கள் வெள்ளை மற்றும் நீலநிறத்தில் காணப்படும். அவரையில் பலவகைகள் உள்ளன. அவரையின் இலை, காய் ஆகியவை மருத்துவ பயனுடையது.

அவரைக்காயில் இரும்புசத்து, நார்ச்சத்து, புரதம் ஆகியவை நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது. இதை அடிக்கடி சமைத்துண்ண உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சோர்வை நீக்கும். உடல் உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. கண் பார்வை தெளிவு பெரும்.

அகத்தியர் பாடல்

அவரையிலைக் குத்தலை நோய் ஆழ்ந்த கிராணி
இவரும் விடூசிமுதல் தீபனமாங் கோதாய்!
விரணமறுங் கண்டவர்க்கத் தோற்றுமிது கண்

பொருள்

அவரை இலைக்கு தலை நோய், பேதி, நீண்ட காலம் ஆறாத புண் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் பசியை தூண்டக்கூடிய தன்மையும் உண்டு. இதுவே அப்பாடலின் பொருள்.

அவரை வகைகள்

  • கோழி அவரை
  • சப்பரத்தவரை
  • கொத்தவரை
  • சீனி அவரை
  • காட்டவரை
  • பூனைக்கால் அவரை
  • சீமை அவரை
  • முருக்கவரை
  • வாளவரை
  • பேயவரை
  • ஆட்டுக்கொம்பு அவரை
  • வெள்ளை அவரை

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை அவரைக்காய் தருகிறது. குழந்தைகளின் மூளை மற்றும் முதுகுத்தண்டு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் அவைரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.

இரத்த சிவப்பணுக்கள்

அவரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இதனால் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஒரு கப் அவரையில் 33% அளவு இரும்புச்சத்து உள்ளது. இது அன்றாட மனிதனின் தேவையை பூர்த்திசெய்கிறது.

உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது

ஒரு கப் அவரைக்காயில் 36கி நார்சத்து நிறைந்து உள்ளது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் வராமல் இருக்க உதவுகிறது, மேலும் உடல் உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்க உதவுகிறது.

உடல் எடை குறைய

அவரைக்காயில் உள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதனால் இதயம் சீராக இயங்க உதவி செய்கிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க

அவரைக்காயை சூப்பாக வைத்து சாப்பிட்டு வர நல்ல ஞாபக சக்தி உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.

மன அழுத்தம்

அவரைக்காய் நரம்புகளை வலுப்படுத்துவதால் நரம்புக்கோளாறு நீங்கும். மேலும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தரும். பதற்றம், படபடப்பு ஆகியவை நீக்கும்.

அவரை இலை பயன்கள்

  • இதன் இலைச்சாறு எடுத்து ஒரு வெள்ளை துணியில் நனைத்து நெற்றில் ஒட்டிவைக்க தலைவலி குணமாகும்.
  • அவரை இலைச்சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலந்து அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து புண், வீக்கம் மற்றும் காயங்கள் மீது போட்டு வர குணமாகும்.
  • அவரை இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து 1 அல்லது 2 ஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணமாகும்.
  • இதன் இலைச்சாற்றுடன் மஞ்சள் சேர்த்து வேர்க்குரு, சிரங்கு உள்ள இடங்களில் பூசிவர குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =

error: Content is protected !!