சோம்பு பயன்கள்
சோம்பு (பெருஞ்சீரகம்) நறுமணத்திற்க்காகவும் சாப்பாட்டிற்கு பிறகு வாய்க்கு புத்துணர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வாயு, செரியாமை, மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு அளிக்கக்கூடியது.
அசைவ உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்திற்கு பிறகு சோம்பு சாப்பிடுவார்கள் இதனால் கடினமான உணவையும் எளிதில் செரிக்க வைக்க ஆற்றல் உள்ளது.
செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட வைக்கிறது
நெஞ்செரிச்சல், வாயு, வீக்கம் மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்வதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்குகிறது.
கண் பார்வையை மேம்படுத்துகிறது
இதில் வைட்டமின் ஏ சத்துக்களை உள்ளடக்கியதால் கண்களுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. கண்களில் பசும்படலம் ஏற்படுவதை தடுக்கிறது. ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அதனை குணாக்குகிறது.
உடல் எடை குறைய
உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது. சோம்புத்தேனீர் அருந்திவந்தால் உடல் எடையை குறைத்து உடலை சரியான எடையில் பராமரிக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் 10 சோம்பு விதைகளை நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் அகலும். இதில் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்கும் பண்புகள் உள்ளன.
உயர் இரத்த அழுத்தம் சீராகும்
இரத்த ஓட்டத்தில் திரவ அளவை சீராக்குகிறது. இது இரத்தத்தின் அழுத்தத்தை குறைகிறது. இதில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்த அளவை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதயத்தை பாதுகாக்குகிறது.
சரும அழகுக்கு
ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் சோம்புவை போட்டு 30 நிமிடங்களுக்கு பிறகு ஒரு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து இறக்கி வடிகட்டி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாக மாறும்.
சோம்பு சூரணம்
இச்சூரணத்தை 5 கிராம் அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் 3 வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று பொருமல், அசீரண கோளாறு, மந்தம், மலச்சிக்கல் ஆகியவை குணமாகும்.
சோம்பு தண்ணீர் செய்முறை
இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 2 ஸ்பூன் அளவு சோம்புவை போட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வடிகட்டிபருகவேண்டும் .
சோம்பு தண்ணீர் பயன்கள்
- 1.பித்தத்தை தணிக்கும்.
- 2.உடல் பருமனை குறைகிறது. உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க உதவுகிறது.
- 3.மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
- 4.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
- 5.சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- 6.நல்ல தூக்கத்தை தருகிறது.
- 7. உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
- 8.தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவுகிறது.
- 9.கண் பார்வை தெளிவு பெறச் செய்கிறது.