தேங்காய் எண்ணெய் பயன்கள்
தேங்காய் எண்ணெய் சமையல் மற்றும் இயற்கை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் எண்ணெயாகும். ஆனால் தற்போது தேங்காய் எண்ணையில் சமைப்பதை அதிகம் பேர் நிறுத்தி விட்டனர். இதில் கொலஸ்ட்ரால் அதிகம் என்ற வதந்தி தான் காரணம்.
உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. மேலும் கூந்தலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகளை தரக்கூடியது. இதன் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
மேலும் சித்த மருத்துவத்தில் தேங்காய் எண்ணையில் இருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. சமையலில் சாம்பார், கூட்டு, பொரியல் என எதாவது ஒரு வகையில் தினமும் பயன்படுத்துவது நல்லது.
கேரளாவில் உணவுகளில் அதிகளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
தோல் சுருக்கம் நீங்க
முன்பு கை மற்றும் கால்களில் தேங்காய் எண்ணையை தேய்த்துக்கொள்வார்கள் இதனால் தோல் சுருக்கங்கள் ஏற்படாது. ஆனால் இப்பொழுது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. எனவே சுத்தமான தேங்காய் எண்ணையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தாலே முகச்சுருக்கங்கள் நீங்கும்.
உயர் ரத்த அழுத்தம் நீங்கும்
தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் ஞாபக மறதி நீங்கும். மேலும் தைராய்டு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்கும். பெண்களின் அடிவயிற்றில் சேரும் கொழுப்பை கரைக்கும்.
தீக்காயங்கள் குணமாக
தீப்புண்களுக்கு வெறும் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் விரைவில் குணமாகும். தோல் நோய்களுக்கு மருந்து தயாரிக்க தேங்காய் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
தழும்புகள் நீங்க
தோலில் உள்ள தழும்புகள் மற்றும் கை, கால்களில் கருப்புநிறத்தில் காணப்படும் திட்டுக்கள் போன்றவை மறைய தொடர்ந்து தேங்காய் எண்ணையை தேய்த்து வர நீங்கும்.
தலைமுடி நன்றாக வளர
தேங்காய் எண்ணையை மட்டும் பயன்படுத்தி வந்தாலே கூந்தல் நன்றாக செழித்து வளரும். இதனுடன் செம்பருத்தி, மருதாணி, கறிவேப்பிலை, சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தலைமுடி பிரச்சனைகள் தீர்ந்து முடி நன்றாக வளரும்.
வாய் துர்நாற்றம் நீங்க
தேங்காய் எண்ணையை கொண்டு வாய் கொப்பளித்தால் (ஆயில் புல்லிங் ) வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
தூக்கமின்மை
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தேங்காய் எண்ணையை தொப்புளில் வைத்தால் நன்றாக தூக்கம் வரும். கண் பார்வையும் தெளிவு பெறும்.
முகப்பரு நீங்க
தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி வந்தால் இதில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது.மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் எப்படி பயன்படுத்த வேண்டும்
தேங்காய் எண்ணையை தலைமுடிக்கு மேற்புறமாக தேய்க்காமல் நன்றாக தோலில் படும்படியாக தேய்க்க வேண்டும். தேய்த்து விட்டு சிறிது நேரம் மஜாஜ் செய்து 1/2 நேரம் கழித்து இயற்கை சிகைக்காய் போட்டு குளித்து வர வர வேண்டும். இதனால் முடி கொட்டுவது நின்று நன்றாக முடி அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய் தீமைகள்
- சிலருக்கு அதிக அளவு தேங்காய் எண்ணையை பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு, இரைப்பை கோளாறு மற்றும் வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
- தேங்காய் எண்ணையினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு குளிர்பானம், ஐஸ் கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.