மூலிகைகள்

பூண்டு மருத்துவ பயன்கள்

பூண்டு கையில் இருந்தால் போருக்கே கிளம்பலாம் என்பார்கள். ஏனென்றால் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது இது. சைவம், அசைவம் என பூண்டு நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்துகின்றோம். இதன் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும்

பூண்டு சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டத்தை சீராகக்குகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. உடலுக்கு புத்துணர்வை தருகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது

வாயு கோளாறு, பிடிப்பு நீங்க

பூண்டை தீயில் சுட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டு வர வாய்வு கோளாறு, அதனால் ஏற்படும் முதுகு, இடுப்பு பிடிப்பு,ஆகியவை நீங்கும். சளியை நீக்கும். செரிமானத்தை அதிகரிக்கும்.

வயிற்றுக்கோளாறுக்கு பூண்டு ரசம்

பூண்டுடன் மிளகு சேர்த்து ரசமாக வைத்து சாப்பிட்டு வர வயிற்றுக்கோளாறு நீக்கும். வாயு, பிடிப்பு ஆகியவை குணமாகும்.

இருதய நோய் ஏற்படுதை தடுக்கிறது

பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வர இருதய நோய் மற்றும் சர்க்கரைநோயை உண்டாக்கும் ஹோமோசிஸ்டின் அமினோ அமிலத்தை குறைக்கும். இதில் ஆண்டிபங்கல் மற்றும் ஆண்டிபாக்டீரியல் ஆகியவை இன்சுலின் சுரப்பிற்கு எதிர் வினையாற்றும்.

இரத்த வெள்ளையணுக்கள்

பூண்டில் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளதால் நோய் எதிப்பு சக்தியை தருகிறது. இரத்த வெள்ளையணுக்களின் செயல்பாட்டினை அதிகரிக்கச்செய்கிறது.

மூச்சு அடைப்பு நீங்க

5 முதல் 7 பூண்டு பற்களை எடுத்து தோல் நீக்கி ஒரு டம்ளர் பாலில் வேகவைத்து நன்றாக வெந்ததும் பூண்டை கரைத்து சிறிது பனங் கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர நெஞ்சு வலி, மூச்சடைப்பு ஆகியவை குணமாகும்.

காது வலி குணமாக

100மிலி நல்லெண்ணையில் ஒரு பூண்டினை தோள்களை நீக்கி காய்ச்சி ஆறவைத்து சில துளிகளை காதுகளில் விட காது வலி குணமடையும்.

பல் ஆரோக்கியம்

பல் ஆரோக்கியம் மற்றும் பல் வலி, பல் கோளாறு உள்ளவர்கள் தினமும் 2,3 பூண்டுப்பல்லை நன்றாக மென்று சாப்பிட பல் ஆரோக்கியம் மேன்படும்.

வாத நோய்கள் குணமாக

  • பூண்டுப்பல் – 20
  • விளக்கெண்ணெய் – 50 மில்லி
  • வேப்பெண்ணெய் – 50 மில்லி
  • புங்க எண்ணெய் – 50 மில்லி
  • இலுப்பெண்ணெய் – 50 மில்லி
  • தழுதாளை இலை – ஒரு கைப்பிடி அளவு
  • நொச்சி இலை – ஒரு கைப்பிடி அளவு

முதலில் பூண்டினை இடித்து சாறு எடுத்து வைத்துக்கொண்டு பிறகு மேற்கண்ட எண்ணெய்வகைகளை ஒன்றாக கலந்து தழுதாளை இலை, நொச்சி இலை இவற்றை பூண்டுச்சாறு ஊற்றி அரைத்து அந்த எண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு இறக்கி ஆறியதும் வாதம் உள்ள இடங்களில் ஊற்றி தேய்த்து வர வாத நோய்கள் குணமாகும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

பூண்டினை பச்சையாக சாப்பிடலாம் இது மருத்துவ குணத்தை முழுவதுமாக தரும். பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம். அல்லது பூண்டுக்குழம்பு, ரசம், பூண்டுச் சட்னி இது போன்று சமைத்து உண்ணலாம்.

பூண்டு குழம்பு

பூண்டை தனியாக சாப்பிட பிடிக்காதவர்கள் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து குழம்பாக வைத்து வாரம் ஒருமுறை சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =

error: Content is protected !!