மூலிகைகள்
சப்போட்டா பழம் பயன்கள்
சப்போட்டா இதன் தாவரவியல் பெயர் Achars Sapota. இது பார்ப்பதற்கு இலுப்பை போல் இருப்பதால் இதை சீமை இலுப்பை என்று தமிழில் அழைப்பார்கள். ஆனால் நடைமுறையில் சப்போட்டா என்றே அழைக்கப்படுகிறது.
இதன் தோற்றம் பலரையும் விரும்பி உண்ண தூண்டக்கூடியதாக இல்லாததால் அதிகமானோர் இதனை சாப்பிடுவது இல்லை ஆனால் நல்ல சுவையுடன் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது இந்தியா, பாக்கிஸ்தான், மெக்சிகோவில் அதிகமாக விளைகிறது.
சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்
இதில் குளுக்கோஸ் நிறைந்துள்ளதால் உடல் உழைப்பு அதிகமாக உள்ளவர்கள் நிச்சயம் சாப்பிடவேண்டும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், புரதம், பாஸ்பரம் என அதிகப்படியான சத்துக்களை கொண்டதால் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழங்களை சாப்பிடுவது நல்லது.
சப்போட்டா பழத்தின் நன்மைகள்
- கண் பார்வை திறனை அதிகரிக்கிறது, வயது ஆனாலும் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது.
- குடல் அழற்சி, எரிச்சல், இரைப்பை அழற்சி போன்ற நோய்களை வராமல் தடுக்கிறது.
- நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. குடலில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பை தருகிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் ஏற்படும் பலவீனம், மயக்கம் போன்றவற்றை குறைத்து உடலுக்கு பலத்தை கொடுக்கிறது.
- இதில் வைட்டமின்கள் ஈ, ஏ, சி போன்றவை உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் உள்ள ஈரப்பதபண்புகள் சருமத்தை மென்மையாக்குகிறது.
- உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் 2 சப்போட்டாப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடையை சீராக்கி உடல் பருமனை குறைக்கும்.
- வாய்ப்புண், மூலம், வயிற்றுக்கோளாறு ஆகியவற்றை குணமாக்கும். இரத்த நாளங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- இரவு தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் சப்போட்டா ஜூஸ் குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.
- சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதைகளை நீக்கி அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை தீரும்.
- சப்போட்டபழம் சாப்பிடுவதால் மூளையின் நரம்புகளை சாந்தப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. மன ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வாக உள்ளது.
- சப்போட்டாப்பழம் சாப்பிட்ட பிறகு சிறுது சீரகத்தை மென்று சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
- இதயக்கோளாறுகளை நீக்குவதாக அமெரிக்க ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் சப்போட்டா பழங்களை எடுத்துகொள்வது இதயத்திற்கு நல்லது.