உலர் திராட்சை பயன்கள்
உலர் திராட்சை இரத்த சோகை மற்றும் முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது. மேலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. பொங்கல், கேசரி, பாயசம் போன்ற உண்வு வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.
உலர் திராட்சையில் வைட்டமின்கள் பி, சி, இரும்புச்சத்து, கரோட்டின்கள், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
இரத்தசோகை நீங்க
100கி உலர் திராட்சையில் 23% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் இரத்தசோகையை நீக்கும். முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்குகிறது. இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. உடல் பலம் அதிகரிக்கும்.
மெலிந்த உடல் எடையை அதிகரிக்க
தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்கும். இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு நல்ல பலத்தை அதிகரிக்கும்.
தோல் நோய்களை குணமாக்குகிறது
உலர் திராட்சையை சாப்பிட்டு வர உடல் சூட்டினால் முகத்தில் தோன்றும் கொப்புளங்களை நீங்கும். மேலும் தோல்நோய்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். முகம் பொலிவு பெறும்.
கண் பார்வை திறன் மேம்பட
இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர கண் பார்வைத்திறன் அதிகரிக்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.
ஆண்மை அதிகரிக்கும்
உலர் திராட்சை 25 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி 1/2 நேரம் கழித்து நன்றாக பிசைந்து சாப்பிட தாது விருத்தியடையும். குடல் சுத்தமாகும்.
எலும்புகளை வலுவாக்கும்
உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர எலும்புகளை வலுவாக்கும். இரண்டிலும் கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகளை உறுதியாக்கும்.
வீக்கங்கள் குணமாக
உலர் திராட்சையுடன் மொச்சைப்பருப்பு, சீரகம் சேர்த்து அரைத்து வீக்கத்திற்கு பற்று போட குணமாகும்.
இதய பாதுகாப்பு
பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் உடலில் உள்ள தசைகள் சுருங்கி விரிந்து நரம்புகளை, தூண்டப்படுவதுக்கும், இதய துடிப்பை சீராக இயங்க வைக்கிறது.
உலர் திராட்சை எப்படி சாப்பிட வேண்டும்
- உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.
- தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
- சூடான பாலில் போட்டு சாப்பிடலாம்.
- வெறும் திராட்சையாகவும் மென்று சாப்பிடலாம்.