நத்தை சூரி பயன்கள்
நத்தை சூரி பட்டையான தண்டுக்களையும் மிகச்சிறிய பூக்களையும் கொண்ட செடியினம். தமிழகமெங்கும் தானே வளரக்கூடியது. இதன் வேர் மற்றும் விதை மருத்துவ பயனுடையது . இதற்கு தருணி, குழி மீட்டான் என வேறு பெயர்களும் உண்டு.
தாய்ப்பால் அதிகரிக்க
நத்தைசூரி வேரை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து வடிக்கட்டி காலை, மாலை தினமும் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.
உடல் உறுதிக்கு
இதன் வேரை 20 கிராம் அளவு எடுத்து எடுத்து 200மிலி அளவு தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதை வடிகட்டி 50மிலி அளவு தினமும் 3 வேளை குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் உறுதி பெறும் .
கல்லடைப்பு நீங்க
இதன் விதையை பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சுண்டக்காய்ச்சி அதில் பசும்பால், கற்கண்டு கலந்து தினமும் காலை, மாலை குடித்து வர கல்லடைப்பு நீக்கும். உடல் சூடு தணியும், சதையடைப்பு குணமாகும்.
வயிற்றுப்போக்கு குணமாக
இதன் விதை பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து 5 கிராம் அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குணமாகும்.
ஆண்மை அதிகரிக்க
நத்தை சூரி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் 2 வேளை குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். விந்து பலத்தை அதிகரிக்கும்.