மூலிகைகள்

தாம்பத்திய உறவை நீட்டிக்க செய்யும் நீர்முள்ளி விதை

நீர்முள்ளி இலைகள் ஈட்டி போன்றும், மலர்கள் நீல நிறத்திலும் முட்கள் உள்ள செடியினம் நீர் நிலைகளில் வயல் வாய்க்கால், நெல் பயிர் செய்யும் வரப்புகளிலும் அதிகமாக காணப்படும். செடி முழுவதுமே மருத்துவ பயனுடையது.

தேவையற்ற நீரை வெளியேற்றும் உடலுக்கு உறுதியைத் தரும். இதில் நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. ஆண்களுக்கு இது ஒரு சிறந்த மூலிகை ஆகும்.

தாம்பத்திய உறவு நீடிக்க

இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 200 மிலியாக வந்தவுடன் பனகற்கண்டு கலந்து தினமும் காலை, மாலை என இருவேளை ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர தாது பலம் உண்டாகும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவு நீடிக்கும். வாதநீர், நீர் எரிச்சல் ஆகியவை உண்டாகும்.

ஆண்மை விறைப்பு தன்மை அதிகரிக்க

  • நீர் முள்ளி விதை – 50 கிராம்
  • அமுக்கராங் கிழங்கு – 50 கிராம்
  • ஓரிதழ் தாமரை – 50 கிராம்
  • பூனைக்காலி விதை – 50 கிராம்
  • ஜாதிக்காய் – 50 கிராம்
  • தண்ணீர்விட்டான் கிழங்கு – 50 கிராம்

இவற்றை அனைத்தையும் ஒன்றாக இடித்து பொடியாக்கி நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்ட ஆண்மை விறைப்பு தன்மை அதிகரிக்கும், தாது பலப்படும். ஆண்மை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க

நீர்முள்ளி விதையை பொடியாக்கி தினமும் காலை, மாலை ஒரு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் நீர்க்கோவை, இரைப்பிருமல் ஆகியவை குணமாகும்.

வயிற்றுப்போக்கு குணமாக

அதிக வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் நீர்முள்ளி விதை பொடியை 1/2 ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ப்ளர் மோரில் கலந்து இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.

வீக்கங்கள் குறைய

நீர்முள்ளி விதையில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்தால் பசைபோல் வரும் அதை வீக்கங்களுக்கு பற்று போட குணமாகும். பெரிய கட்டியாக இருந்தால் உடைத்துக்கொள்ளும்.

நீர்முள்ளி விதை

நீர்முள்ளி குடிநீர்

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை குடிநீராக தயாரித்து 100 மி.லி வீதம் தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட வேண்டும்.

இரத்த அணுக்கள் அதிகரிக்க

நீர்முள்ளி குடிநீர் தொடர்ந்து சாப்பிட இரத்த அணுக்கள் அதிகரிக்கும், உடல் பலமடையும். ஆண்களுக்கு தாது பலப்படும்

இரத்த சோகை

இரத்த சோகையை நீக்கும். மூட்டுகளுக்கு உறுதியத்தரும். உடல் உள்ளுறுப்பு வீக்கங்களை குணமாக்கும் தன்மை நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது.

கல்லடைப்பு, சிறுநீரக தொற்று நீங்க

இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் உடல் சூட்டினால் ஏற்படும் நீர் எரிச்சல், கல்லடைப்பு, சிறுநீரக தொற்று, சிறுநீரக கழிவுகளை வெளியேற்றும்.

மாதவிலக்குக் கோளாறு நீங்க

மாதவிலக்குக் கோளாறு, வெள்ளைப்படுதல், அதிக வயிற்று வலி போன்றவற்றை குணமாக்குகிறது. தேவையற்ற நீர்களை வெளியேற்றி உடல் பருமனை குறைத்து உடலை சரியான எடையில் இருக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

error: Content is protected !!