மூலிகைகள்

கசகசா விதைகளின் பயன்கள்

கசகசா (Papaver somniferum) பெரும்பாலும் இந்திய சமையல்களில் சேர்க்கப்பட்டு வருகிறது. இது பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போதை தரும் பொருளாக கருதப்பட்டு சில நாடுகளில் தடை விதிக்க பட்டாலும், இந்தியாவில் அசைவ உணவுகளில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்திலும் ஆண்மை குறைவுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் ஆண்களின் வீரியத்துக்காக சேர்க்கப்படுகிறது. அழகும், ஆண்மையும் அதிகரிக்கும் என்று சித்தர் பாடல்களில் உள்ளது. கசகசாவினால் ஏற்படும் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்.

கசகசா Papaver somniferum
Tamil அபினி (Apini) , போஸ்த்தக்காய் Posttakkay)
English Opium, Poppy seeds
Hindi Apheem, Postadaanaa, Khaskhas, Khasabija
Bengali Aaphim postadaanaa, Postabeej
Gujrati Khaskhas
Kannada Gasgase, Aapheen, Aphini
Malayalam Avil, Karappu, Kashkash, Aalan
Marathi Khaskhas
Oriya Oriya
Sanskrit Ajasrngi, Madhunasini, Khaskhasa
Telugu Gasgashaalu, Nallamandu

பாப்பி விதைகள் (Poppy Seeds)

பாப்பி செடியின் விதைகள் முற்றி காய்ந்த பின் அதிலிருந்து எடுக்கப்படும் விதைகள் தான் கசகசா. இதை பாப்பி விதைகள் (Poppy Seeds) என்றும் வெளிநாடுகளில் அழைக்கப்படுகிறது.

கசகசா விதைகளின் வகைகள்

இதில் பல வகைகள் உள்ளது. வெள்ளை விதைகள் இந்தியாவிலும் மற்றும் ஆசிய நாடுகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நீல விதைகள் ஐரோப்பிய நாடுகளிலும், ஓரியண்டல் விதை போதை தரும் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கசகசாவின் மருத்துவ பயன்கள்

கசகசா விதைகள் உடலை பளபளப்பாக்கும், ஆண்மையை அதிகரிக்கும், பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை மேம்படுத்தும், வயிற்றுப்போக்கு, வாய் புண், செரிமானம் இல்லாமை போன்றவற்றை குணப்படுத்தும். மேலும் புற்று நோயை தடுக்க உதவும்.

ஆண்மை அதிகரிக்க

பாதாம் பருப்பை ஊறவைத்து அதனுடன் கசகசாவை சேர்த்து அரைத்து பாலில் கலந்து சிறிது பானக்கற்கண்டு சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் புதிதாக திருமணம் செய்யும் ஆண்களுக்கு இது போன்று கொடுப்பது வழக்கம்.

மூலம், விந்து இழப்புக்கு

கசகசாவுடன் வால்மிளகு, கற்கண்டு, வாதுமை பருப்பு அனைத்தும் சமஅளவு எடுத்து இடித்து நெய் அல்லது தேன் சேர்த்து பிசைந்து லேகியம் போன்ற பதத்துடன் வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து இழப்பு, மூல நோய்கள் குணமாகும்

பெண்களின் கருவுறுதல் தன்மையை அதிகரிக்க

ஆண்மையை அதிகரிப்பதோடு கருவுறுத்தலை அதிகரிக்கிறது. பெலோப்பியன் குழாய்களில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்வதாக ஆய்வுகளை கண்டறியப்பட்டுள்ளது.

உடல் சூடு குறைய

சாதிக்காய், கசகசா இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து பனகற்கண்டை பாகுபோல் காய்ச்சி அதில் தேனையும் கலந்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

செரிமானக்கோளாறு

கசகசாவை உணவுகளில் சேர்ப்பதால் செரிமானக்கோளாறு நீங்குகிறது. அதனாலேயே இந்திய அசைவ உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

தூக்கமின்மை

கசகசாவின் விதைகளை பவுடராக்கி சூடான பாலில் கலந்து சாப்பிட நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

சருமம் பளபளப்பாக கசகசா

பாதம், பிஸ்தா, வெள்ளரி விதை இவற்றுடன் கசகசாவை சேர்த்து அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள், கருவளையம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

வயிற்றுப்போக்கு குணமாக

கசகசாவை தேங்காய் துவயலில் சேரத்து அரைத்து நெய் சேர்த்து உணவுடன் சாப்பிட வயிற்றுப்போக்கை குணமாக்கும். ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும்.

கசகசா குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

இதில் உள்ள ஓபியட் அளவுகள் குழந்தைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே தவிர்ப்பது நல்லது அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்டு கொடுக்கலாம்.

கசகசா தீமைகள்

கசகசா செடியில் உள்ள காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுப்படுகிறது. இது உடல் நலத்திற்கு எதிராக இருப்பதால் இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =

error: Content is protected !!