அமுக்கரா (ashwagandha) மருத்துவ பயன்கள்
அமுக்கரா வை அமுக்கிரா, அஸ்வகந்தா அல்லது அசுவகந்தி என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலை மருத்துவ பயனுடையதாக இருந்தாலும். இதன் வேர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதிலும் பயிர்ப்படுகிறது. இதன் வேர்களை எடுத்து காயவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து பயன்படுத்தப்படுகிறது.
குணம்
ஆண்மை அதிகரிக்கும், உடல் வெப்பத்தை நீக்கும், இளமையான தோற்றத்தை தரும், எலும்புகளுக்கு பலத்தை தரும்
அமுக்கரா பயன்படுத்தப்படும் மருந்துகள்
அமுக்கரா சூரணம், இராசக்கந்தி மெழுகு, இடி வல்லாதி மெழுகு, கந்தக இரசாயனம், மகா ஏலாதி குளிகை, பரங்கி பட்டை இராசயம், மகா வல்லாதி குளிகை, நந்தி மெழுகு, நாரத்தை இளகம்.
நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மைக்குறைவுக்கு அமுக்கராவை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட நல்ல பலனை தரும்.
அமுக்கரா Withania somnifera | |
Tamil | அசுவகந்தி(asuvakanthi) , அமுக்கிரா கிழங்கு (amukira kilangu) |
Hindi | Asgandh |
Kannada | Angarberu, Hiremaddina- gida |
Malayalam | Amukkuram |
Telugu | Pennerugadda |
Sanskrit | Asvagandha, Hayagandha, Vajigandha |
Assamese | Ashvagandha |
Bengali | Ashvagandha |
Gujrati | Asgandha |
Kashmiri | Asagandh |
Marathi | Asagandha, Askagandha |
Oriya | Aswagandha |
Punjabi | Asgandh |
Urdu | Asgandh |
இடுப்பு வலி, வீக்கம் குறைய
பச்சை அமுக்கராக்கிழங்கை எடுத்து பால் விட்டு அரைத்து இலேசாக சூடேற்றி இடுப்பு வலி, வீக்கம், கண்டமாலை ஆகியவற்றுக்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.
உடலுக்கு உறுதியை தரும்
அமுக்கராக்கிழங்கை பாலில் இட்லி அவிப்பது போல் அவித்து காயவைத்து இடித்து நன்றாக சலித்து தினமும் 2 கிராம் அளவு பாலில் போட்டு குடித்து வர உடலுக்கு நல்ல உறுதியை கொடுக்கும், உடல் பருமன், பசியின்மை ஆகியவை நீங்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கரா பொடி 1 தேக்கரண்டி – கற்கண்டு 3 தேக்கரண்டி பாலில் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
என்றும் இளமையாக இருக்க
- கசகசா – 30 கிராம்
- பிஸ்தா பருப்பு – 5 கிராம்
- பாதம் பருப்பு – 10 கிராம்
- சாரப்பருப்பு – 5 கிராம்
இவற்றை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து அதனுடன் அமுக்கரா சூரணம் – 10 கிராம் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். என்றும் இளைமையாக இருக்க உதவும்.
உடல் சோர்வு, மூட்டு வலி குணமாக
அமுக்கரா சூரணத்தை 1 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர ( 48 நாட்களுக்கு ) மூட்டு வலி குணமாகும், உடல் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெரும்.
ஆண்மை அதிகரிக்க
50 கிராம் அளவு எள், உளுந்து இவற்றை தூள் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு கருப்பட்டியை பாகு காய்ச்சி அதில் எள், உளுந்து தூள்களை கலந்து அதனுடன் அமுக்கிரா சூரணத்தை 50 கிராம் போட்டு கிளறி லேகியம் போல் வந்ததும் தேன் சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு பிறகு பால் அருந்தி வந்தால் விந்து கெட்டிப்படும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.
அமுக்கரா சூரணம்
இது ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, உடல் வலிமை உண்டாக, உடல் பருமன் குறைய, வீக்கம் மட்டும் கட்டிகள் குணமயக்குகிறது.
அமுக்கரா சூரணம் செய்முறை மற்றும் பயன்கள்