மூலிகைகள்

சம்பங்கி பூ பயன்கள்

சம்பங்கி  நல்ல நறுமணமுடைய பூ. இதனை சண்பகம் என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல மனமுடைய பூவாக இருப்பதால் பூஜைகளுக்கு ஏற்றது. இதனை அனைத்து காலங்களிலும் பயிரிடப்படுகிறது. இதில் மருத்துவ குணங்களும் அதிகளவு உள்ளது. நறுமண பொருட்கள் தயாரிப்பிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

சம்பங்கி தைலம்

கோடைகாலங்களில் அதிகளவு சரும பிரச்சினைகள் தோன்றும் இதற்கு சம்பங்கித்தைலம் பயன்படுத்தப்படுகிறது. வேர்க்குரு, தோல் அழற்சி போன்ற நோய்களுக்கு சிறந்ததாகும். 50 கிராம் அளவு சம்பங்கிபூவை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி பயன்படுத்தலாம்.

தலைவலி குணமாக

சம்பங்கிப்பூ 5 அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணையை சேர்த்து அரைத்து வெற்றியில் நன்றாக தடவினால் தலைவலி குணமாகும்.

கர்ப்பப்பை நோய்கள் குணமாக

இதன் துளிர் இலைகளை சிறிதளவு அரைத்து சாப்பிட கர்ப்பப்பையில் உள்ள நோய்களை குணமாக்கும்.

காய்ச்சல், குடற்புண்கள் குணமாக

இதன் பட்டையை நன்றாக வெயிலில் காயவைத்து தூள் செய்து 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும். மேலும் குடற்புண்கள் குணமாகும்.

சம்பங்கி குளியல் பொடி

  • சம்பங்கிப்பூ – 100 கிராம்
  • பயத்தம்பருப்பு – 200 கிராம்
  • வெள்ளரி விதை – 25 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த குளியல் பொடியை பயன்படுத்தி வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =

error: Content is protected !!