மூலிகைகள்

கொண்டைக்கடலை பயன்கள்

கொண்டைக்கடலை (இதன் ஆங்கில பெயர் Chickpeas) நிறைய சத்துக்கள் கொண்ட ஒரு பருப்பு வகையாகும். இதில் இரண்டு வகை உள்ளது, கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வெள்ளை கொண்டைக்கடலை. மத்திய கிழக்கு நாடுகளில் சுண்டல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுவதால், கொண்டைக்கடலை செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது. மேலும் நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது கொண்டைக்கடலை

சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு நல்ல புரதசத்துக்கு கொண்டைக்கடலை சிறந்த உணவாகும். 50 கிராம் அளவு கொண்டைக்கடலையில் சுமார் 6 கிராம் அளவு புரதச்சத்தை தருகிறது. இது கருப்பு பீன்ஸ் மற்றும் பயறு போன்ற தானியங்களில் உள்ள புரத சத்துக்கு இணையானது.

உடல் எடையை சரியாக பராமரிக்க, உடல் உறுதி பெற

கொண்டைக்கடலை மிகவும் குறைந்த கலோரியை கொண்டுள்ளதால் உடல் எடையை சரியாக இருக்க உதவுகிறது. இரவில் கொண்டைக்கடலையை ஊறவைத்து காலையில் அவித்து சாப்பிட்டுவர உடல் உறுதி பெறும்.

நீரிழிவு நோய்

ஒரு கப் (164 கிராம்) எடையுள்ள கொண்டைக்கடலையில் 12.5 கிராம் ஃபைபர் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. நாள் ஒன்றுக்கு 30 கிராம் ஃபைபர் எடுத்துக்கொண்டால் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. ஃபைபர் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கவும் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது

எலும்புகள் உறுதி பெற

கொண்டைக்கடலையில் உள்ள இரும்புசத்து, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலின் உள்ள எலும்பை வலிமையாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

164 கிராம் எடையுள்ள ஒரு கப் கொண்டைக்கடலை, 474 மி.கி. பொட்டாசிய சத்தை கொண்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

கொண்டைக்கடலையில் உள்ள நார்சத்து , பொட்டாசியம், வைட்டமின் பி , இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலினியம் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஃபைபர் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது. இதனால் இதய நோய் அபாயத்தை குறைகிறது.

புற்றுநோயை தடுக்கிறது

வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் உடலில் சேரும் நச்சுப்பொருட்களை உருவாக்கும் போது அவை செல்களை சேதப்படுத்தி புற்று நோய் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 55 மி.கி செலினியம் உட்கொள்ள வேண்டும். கொண்டைக்கடலையில் செலினியம் உள்ளதால். இது புற்றுநோயில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
கொண்டைக்கடலையில் உள்ள ஃபைபர், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்பு

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க கொண்டைக்கடலையை உள்ள நார்ச்சத்து உதவுகிறது. 2006 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இதை கண்டறிந்து உள்ளனர்.

மன ஆரோக்கியம்

ஒரு கப் சுண்டலில் 69.7 மி.கி கோலின் (choline) உள்ளது, இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மனநிலை, தசைக் கட்டுப்பாடு, கற்றல் மற்றும் நினைவாற்றல் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தில் கோலின் பங்கு வகிக்கிறது.

இரத்த சோகை

இரும்புசத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. இரத்த சோகை உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனத்தை அதிகரிக்கும் இது உடல் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்.
ஒரு கப் கொண்டைக்கடலை 4.7 மிகி இரும்புசத்தை கொண்டுள்ளது. இது ஒரு நபரின் தினசரி தேவையின் 5 ல் ஒரு பங்கை உடலுக்கு அளிக்கிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க

கொண்டைக்கடலையை ஊறவைத்து நன்றாக அரைத்து சிறிது மஞ்சள்பொடி சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின்னர் நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =

error: Content is protected !!