அழகு
தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க
தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க பல வழிமுறைகள் உள்ளன. பெண்கள் சிலருக்கு கைகள், கால்கள் மற்றும் முகத்திலும் முடி முளைக்கும் இது பெண்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மஞ்சள் – 150 கிராம்
- துத்தி இலை – 100 கிராம்
- குப்பைமேனி – 100 கிராம்
- கடுக்காய் தோல் – 100 கிராம்
- நெல்லி வற்றல் – 100 கிராம்
- மகிழம்பூ – 100 கிராம்
- கடலைப்பருப்பு – 100 கிராம்
- செம்பருத்தி – 50 கிராம்
- சந்தனம் – 50 கிராம்
- வெட்டி வேர் – 25 கிராம்
- வெற்றிலை – 25 கிராம் (உலர்ந்தது)
செய்முறை
இவற்றை ஒன்றாக அரைத்து வைத்துக்கொண்டு குளிக்கும் போது பசும்பாலில் தேவையான அளவு இந்த பொடியை தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில தேய்த்து குளிக்க தேவையற்ற முடிகள் நீங்கி நல்ல அழகும் இளைமையான தோற்றத்தையும் பெறலாம்.