நன்றாக தூங்க உதவும் உணவுகள்
நல்ல உறக்கத்தில் கனவு வரும். ஆனால் சிலருக்கு உறக்கம் என்பதே பெரும் கனவாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாளில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவிற்கு உடல் சேர்வடைந்துவிடும்.
தூக்கமின்மைக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தாலும், சில உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் எளிதில் உறக்கம் வர அதிக வாய்ப்புகள் உள்ளது அவற்றை பற்றி பார்ப்போம்.
பாதாம்பால்
பாதாம் பருப்பில் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால் தசைகளை தளர்வடைய செய்வதுடன் நல்ல தூக்கத்தை தரும். மேலும் இதில் உள்ள புரதசத்து தூக்கத்தின் போது ரத்த சர்க்கரை அளவை சீராக இருக்க உதவுகிறது. எனவே தூக்கத்திற்கு முன்பு பாதம் பால் சாப்பிடுவது சிறந்தது.
பால் பொருட்கள்
பால், தயிர், மோர், வெண்ணை போன்ற பால் பொருட்களில் ட்ரிப்டோபேன் என்ற தூக்கத்தை தூண்டும் வேதிப்பொருள் உள்ளதால் இதை சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
இரவினில் பால் பொருட்கள் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
முட்டை
முட்டையில் புரதம் அதிக அளவில் உள்ளதால் இதனை இரவினில் சாப்பிடுபவர்கள் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
செர்ரிபழம்
தூங்குவதற்கு முன் 5, 6 செர்ரிபழங்களை சாப்பிட்டால் நல்ல இடையூறு இல்லாத தூக்கத்தை பெறலாம். இதை சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்க உதவுகிறது.