காளான் பயன்கள்
காளான் சாப்பிடுபவர்களின் எண்னிக்கை தினமும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. காளான் உணவுகள் சாப்பிட சுவையாகவும் மற்றும் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளதால் இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
காளான் வகைகள்
இந்தியாவில் பலவகை காளான்கள் இருந்தாலும் சிப்பி காளான், மொக்கு காளான், வைக்கோல் காளான் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பக்கவாதம் வராமல் தடுக்க
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் இரத்த நாளங்களில் உட்பரப்பில் ஏற்படும் கொழுப்பை தடுக்கிறது. இதனால் இதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
இதயத்தை காக்கும் காளான்
பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் காளான் முதன்மையானது 100 கிராம் காளானில் 447 மில்லிகிராம் பொட்டாசியச்சத்து காளானில் உள்ளது. சோடியம் 9மில்லிகிராம் உள்ளது. இதனாலேயே காளான் இதயத்தை காக்கும் சிறந்த உணவாக உள்ளது.
தேவையற்ற கொழுப்பை தடுக்கிறது
காளானில் உள்ள லென்டைசின், எரிட்டினைன் போன்ற வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள பாஸ்போலிட், கிளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது. எரிட்டினைன் கொழுப்பு பொருட்களை எந்த பாதிப்பு இல்லாமல் இரத்தத்தில் இருந்து வெளியேற்றி திசுக்களுக்கு அனுப்பி உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோய்
ஆண்களுகளை தாக்கும் புரோசுட்டேட் புற்றுநோய் மற்றும் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் காளான் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. புற்றுநோய் செல்களை அளிக்கும் ரசாயனகள் அதிகளவு காளானில் காணப்படுகிறது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் நோய் பரவும் தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
உடல் எடை குறைய
உடல் எடையை குறைப்பதற்கு காளான் மிகச்சிறந்த பலனை தருகிறது. கொழுப்பு இல்லாத நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் உடல் எடையை சரியான விகிதத்தில் இருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் காளான் உணவை எடுத்துக்கொள்ளலாம்.
இளமையாக இருக்க
காளான் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோள்களில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும் தோல்கள் மென்மையாக காணப்படும்.
சரும பொலிவு
பெண்கள் அதிகளவு விரும்பும் ஒன்று சரும பொலிவு. இயற்கையாகவே சருமம் பொலிவு பெற காளான் முக்கிய பங்கு வகிக்கிறது இதில் உள்ள கோஜிக் அமிலம் தோல் ஒளிரும் தன்மையை இயற்கையாகவே மேம்படுத்துகிறது.
தோல்களில் மெலனின் உற்பத்தி அதிகமானால் தோல்கள் கருமை நிறத்தில் மாறத்தொடங்கும். காளான் மெலனின் உற்பத்தியை தடுத்து இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.
காளானை எப்படி சாப்பிடலாம்
- காளானை சூப் செய்து சாப்பிடலாம்.
- முட்டை அல்லது மாமிசத்துடன் சேர்த்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்.
- ரொட்டிகள் மற்றும் சாண்ட்விச் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
- காளானை தக்காளி, வெங்காயம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
- சுண்டைலை ஊறவைத்து அவித்து காளானுடன் சேர்த்து மாலை நேர உணவாக சாப்பிடலாம்.
காளான் தீமைகள்
- காளான் நல்ல ருசியான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாக இருந்தாலும் இது அனைவருக்கும் ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
- வாத நோய் இருப்பவர்கள் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
- பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கை
காளான்கள் பல இடங்களில் காணப்படும் சிலவகை காளான்கள் நச்சு தன்மைகொண்டதாகவும் இருக்கும் அவற்றை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது