அழகு

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க, முகம் பொலிவோடு பிரகாசமாக இருக்க கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும். அதில் கிளின்சிங் மூலம் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேற்றப்படும்.

டோனிங் மூலம் சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியேறுவது தடுக்கப்படும். மாய்ஸ்சுரைசிங் மூலம் சருமத்தின் pH அளவு தக்க வைக்கப்படும்.

தற்போது கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர் உள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக நீக்கப்பட்டு, சருமத்தின் வறட்சி அதிகரித்து, பொலிவற்றதாக காட்சியளிக்கும்.

ஆனால் இயற்கை டோனர்களைப் பயன்படுத்தினால், அதனால் எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு இயற்கை டோனர்கள் எவையென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள அந்த டோனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

புதினா இலைகள்

புதினா இலைகள் சிறந்த டோனராக செயல்படும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றவும் உதவும்.

அதற்கு புதினா இலைகளை கொதிக்க வைத்த நீரில் போட்டு, குளிர வைத்து, பின் அந்த நீரால் முகத்தைத் துடைத்து எடுத்த பின், மீண்டும் அந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

தக்காளி ஜூஸ்

கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும்.

அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.

பப்பாளி

பப்பாளிப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும், பிறகு நீரில் கழுவி விடவும்.

இவ்வாறு செய்யும் பொது சருமத்தில் உள்ள துளைகள் ஆழமாக சுத்தமாக்கும், இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தயிர்

1/2 கப் தயிர், சிறிதளவு மஞ்சள் தூள் , 1/2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர எண்ணெய் பசை நீங்கி முகம் ப்ளீச்சிங் செய்தது போல் தோற்றமளிக்கும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி சருமத்திற்கு சிறந்த மூலிகையாகும். முல்தானி மெட்டி பவுடரை சிறிது தண்ணீர் சேர்த்து குழப்பி முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர சருமம் பளபளப்பாகும்.

சந்தனம்

சந்தனம் சருமத்திற்கு சந்தனம் மிகச் சிறந்த பொருள். உடல் வெப்பத்தை குறைக்க கூடியது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்க சந்தனத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீங்க நல்ல சரும பொலிவை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 14 =

error: Content is protected !!