அழகு

கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணி!

கோடையில் தர்பூசணி அதிக அளவில் கிடைக்கும். அந்த தர்பூசணியை வாங்கி சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் அழகாக ஜொலிக்கலாம்.

முக்கியமாக தர்பூசணி கொண்டு சருமத்தைப் பராமரித்தால், கோடையில் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஏனெனில் தர்பூசணியில் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது.

மேலும் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் கோடையில் சருமத்தில் இருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெயை தடுக்கும்.

சோர்வுடன் காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். முக்கியமாக பருக்கள் மற்றும் வெயிலால் சருமம் கருமை அடைவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது கோடையில் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும் தர்பூசணியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம்

வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தர்பூசணி பழத்தின் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொள்வதோடு, மற்றொரு துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், வெயிலினால் பாதிக்கப்பட்ட சருமம் குளிர்ச்சியடையும்.

பொலிவான சருமம்

தர்பூசணியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

சுருக்கமான சருமம்

சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிலும் தர்பூசணி பழத்தை அரைத்து, அத்துடன் அவகேடோவை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சுருக்கங்கள் மறையும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம் உள்ளவர்கள், தர்பூசணி பழத்தினை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 9 =

error: Content is protected !!