அழகு

உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!

மூலிகை குளியல் உடல் சோர்வைப் போக்கி உடலை புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான இந்திய மூலிகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. பல சரும நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.

அதற்கு மூலிகைகளை அரைத்து சருமத்தில் தடவி பயன் பெறலாம் அல்லது அவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து ஊற வைத்து குளிக்கலாம். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவையும் நீங்கும்.

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

மூலிகை குளியல் பொடி

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

மூலிகை குளியல்  பொடி தயாரிப்பது எப்படி?

  • சோம்பு 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
  • வெட்டி வேர் 200 கிராம்
  • அகில் கட்டை 200 கிராம்
  • சந்தனத் தூள் 300 கிராம்
  • கார்போக அரிசி 200 கிராம்
  • தும்மராஷ்டம் 200 கிராம்
  • விலாமிச்சை 200 கிராம்
  • கோரைக்கிழங்கு 200 கிராம்
  • கோஷ்டம் 200 கிராம்
  • ஏலரிசி 200 கிராம்
  • பாசிப்பயறு 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.இதில் உள்ள மூலிகைகளை உடலுக்கு எதிர்பாற்றலை தருகிறது.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =

error: Content is protected !!