உங்கள் எடை குறையனுமா? முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுங்கள்
முட்டை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறன்றனர், ஆனால் அதில் உண்மை இல்லை ஏனென்றால் முட்டையில் கால்சியம், புரதம், நல்ல கொழுப்பு, விட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளது.
உடல் எடையை குறைக்க முட்டையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் எடை குறையும். அது என்னென்ன உணவுகள் என்பதை பற்றி பார்ப்போம்.
கீரை
பசலை கீரையை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது நமக்கு கிடைக்கும் சத்துக்கள் இரட்டிப்பாகிறது. இதனால் பசலைக்கீரையுடன் முட்டை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை சீராக இருக்கும்.
கருப்பு பீன்ஸ்
அதிக புரதச்சத்து உள்ள கருப்பு பீன்ஸை முட்டையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வயிற்றுக்கொழுப்பை விரைவாக கரைக்கிறது. இதனால் உடல் எடை உடனடியாக குறைகிறது.
முளைகட்டிய பயறு வகைகள்
முட்டையுடன் முளைக்கட்டிய பயறு வகைகளை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கிறது. கொழுப்பை குறைக்கும் இதனால் உடல் எடை குறையும்.
அவகோடா
அவகோடாவில் நல்ல கொழுப்பு அமிலம் உள்ளததால் முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
மிளகு
முட்டையை ஆம்லெட் செய்தாலும், அவித்தாலும் மிளகு சேர்த்து சாப்பிடும் பொழுது இடுப்பில் சேரும் கொழுப்பை தடுக்கிறது. மிளகில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பு செல்களை உருவாக்கும் அடிபொஜெனீசிஸை தடுக்கிறது.
மிளகாய்
மிளகாய் காரத்தன்மையுடன் ஊட்டச்சத்தையும் தருகிறது. மிளகாயில் விட்டமின் சி கொழுப்பை எரிகிறது. இதனால் முட்டையை பொரியலில் மிளகாய் நறுக்கி பயன்படுத்தலாம்.