உணவே மருந்து
வெள்ளரிக்காய் கூட்டு செய்முறை
தேவையான பொருள்கள்
- வெள்ளரிக்காய் பெரியது – 1
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 3
- சீரகம் – சிறிதளவு
- மிளகு – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு
- கறிவேப்பிலை
செய்முறை
வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். மிளகையும், சீரகத்தையும் ஒன்றாக தூள் செய்து வைத்துக்கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், பிறகு வெள்ளரிக்காயை போட்டு மிளகு-சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.
பயன்கள்
- இது உடலில் உள்ள வெப்பத்தை அகற்றுகிறது.
- சிறுநீரை தாராளமாக இறங்க செய்து நீர்ச்சுருக்கு, நீர் கடுப்பு ஆகியவற்றை நீக்குகிறது.
- கல் அடைப்பு மற்றும் உப்பு நீரை குணமாக்கும்.