மூலிகைகள்

கறிவேப்பிலை பயன்கள்

பல இந்திய உணவுகளில் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம். பெரும்பாலும் அவை குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை “இனிப்பான வேப்பிலை” என்றும் கூட அழைக்கலாம். இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகை செடிகளில் இதுவும் ஒன்றாகும்.

நம் உணவுகளில் வாசனையை ஏற்படுத்தவும். சுவையை கூட்டவும் கறிவேப்பில்லை உதவுகிறது. அதே நேரம், அவற்றில் பல விதமான உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.கறிவேப்பிலைக்கும் முடி வளர்ச்சிக்கும் உண்டான தொடர்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

செரிமானத்திற்கு நல்லது

கறிவேப்பிலை வயிற்றுப்போக்கை தடுக்கும். அவை செரிமான அமைப்பிற்கு நல்லது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் கூட அது உதவுகிறது. இப்படி இதன் பயன்கள் ஏராளம். இது போக, நம் முடியின் வளர்ச்சிக்கும் கூட கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான முடியை பெறுவதற்கு இது மிகவும் உதவுகிறது.

முடி பளபளப்பாக

கறிவேப்பிலை முடியை பளபளப்பாக வைத்திருந்து, முடியின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும்.

முடி கொட்டுதல் குறையும்

கறிவேப்பிலையில் புரதமும் பீட்டா-கரோடினும் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். புரதச்சத்து குறைபாட்டினால் கூட முடி உதிர்வு ஏற்படலாம்.

பொடுகு வராமல் தடுக்க

கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது. அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்

  • பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம். பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்கு காரணம், அதிலுள்ள அதிமுக்கிய ஊட்டச்சத்துகள். இவை முடிக்கு நல்லதை அளிக்கும்.
  • கறிவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர் செய்யும். மேலும் மயிர்த்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். அதன் சுவையினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் அதனை அப்படியே உண்ணவும் செய்யலாம். பாதிக்கப்பட்ட முடிக்கு முதலுதவியாக செயல்படும் கறிவேப்பிலை. முடியின் வேர்கள் வலுவடைந்து விட்டால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

கூந்தல் கருமையாக

  • ஒரு கொத்துக் கறிவேப்பிலையை, அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து, புளித்த மோரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து அலச, கூந்தல் கருகருவென மாறும்.
  • சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து இந்த விழுதை பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதுபோல செய்தால், வளர்ச்சி தூண்டப்பட்டு கருமையாக முடி வளரும்.

தலைமுடி நன்கு செழித்து வளர

  • கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
  • கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 10 =